அரசியல்

MLA-களோடு பேரம் பேசும் பாஜக.. வீடியோவை வெளியிட்ட தெலுங்கானா முதல்வர்.. சிக்கலில் பாஜக தலைமை !

எம்.எல்.ஏக்களுடன் பாஜகவினர் பேரம் பேசும் வீடியோ ஆதாரங்களை விடீயோவை தெலுங்கானா முதல்வரும் பாரத ராஷ்டிர சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் வெளியிட்டுள்ளார்.

MLA-களோடு பேரம் பேசும் பாஜக.. வீடியோவை வெளியிட்ட தெலுங்கானா முதல்வர்.. சிக்கலில் பாஜக தலைமை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்களை தங்கள் கட்சியில் இழுத்து வருகிறது. எதிர்கட்சிகளை மட்டுமின்றி கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்களையும் தங்கள் கட்சியில் சேர்ந்து வருகிறது. இதன் மூலம் பல மாநிலங்களில் ஆட்சியை பிடித்தும் இருக்கிறது.

தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ-க்களை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜ.க முயல்வதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார். அதைத் தொடர்ந்து தெலுங்கானாவில் நடைபெற்ற அதேபோன்ற முயற்சியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தெலங்கானாவின் ஆளும் கட்சியான பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் பைலட் ரோஹித் ரெட்டி, காந்தாராவ், பாலாராஜு, பீராம் ஹர்ஸ்வர்தன் ஆகிய 4 பேரை விலைக்கு வாங்க சிலர் பேரம் பேசியுள்ளனர்.

MLA-களோடு பேரம் பேசும் பாஜக.. வீடியோவை வெளியிட்ட தெலுங்கானா முதல்வர்.. சிக்கலில் பாஜக தலைமை !

பின்னர் இது குறித்த பேச்சு வாரத்தையை ஒரு பண்ணை வீட்டில் வைத்து நடத்தியபோது ஒரு எம்.எல்.ஏ இதுகுறித்து போலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார். அதன்படி பேச்சுவார்த்தை நடந்தபோது அங்கு வந்த போலிஸார் 3 பேர் கொண்ட அந்த கும்பலை கைதுசெய்தது. இந்த சம்பவம் வெளிவந்த நிலையில், இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.போலிஸார் விசாரணையில் 4 எம்.எல்.ஏ-க்களில் ஒருவருக்கு 100 கோடியும் மற்றவர்களுக்கு தலா 50 கோடி தருவதாக பேரம் பேசப்பட்டுள்ளது. மேலும், கான்ட்ராக்ட் , கட்சியில் முக்கிய பதவி கொடுப்பதாகவும் ஆசை வார்த்தை காட்டப்பட்டுள்ளது.

இந்த பேரத்தில் ஈடுபட்டது பாஜகதான் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், அதனை பாஜக மறுத்திருந்தது. இந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு பாஜகதான் காரணம் என்பது தற்போது வெளிவந்துள்ளது. பாஜகவினர் பேரம் பேசும் வீடியோ ஆதாரங்களை விடீயோவை தெலுங்கானா முதல்வரும் பாரத ராஷ்டிர சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் வெளியிட்டுள்ளார்.

MLA-களோடு பேரம் பேசும் பாஜக.. வீடியோவை வெளியிட்ட தெலுங்கானா முதல்வர்.. சிக்கலில் பாஜக தலைமை !

இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சந்திரசேகர ராவ், "தெலுங்கானா, ஆந்திரா, டில்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களைக் கவிழ்க்கச் சதிகள் நடந்திருக்கின்றன. இந்த வீடியோவை நாட்டின் அனைத்து முதல்வர்கள், சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளுக்கும், ஊடகங்களுக்கும் அனுப்பப்படும் முன், இது விரைவில் தலைமை நீதிபதி மற்றும் நாட்டின் அனைத்து உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் பகிரப்படும்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories