India

“கர்நாடகாவில் ஆதார் இல்லாததால் சிகிச்சை அளிக்க மறுப்பு” : கர்ப்பிணி பெண்ணும், இரட்டை குழந்தைகளும் பலி !

கர்நாடக மாநிலம் தும்கூரு டவுன் பாரதிநகரில் வாடகை வீட்டில் தமிழகத்தைச் சேர்ந்தவர் கஸ்தூரி (30), அவரது கணவர் மற்றும் கஸ்தூரியின் 5 வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்த நிலையில் கணவர் சமீபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அனாதையாக இருந்த கஸ்தூரி மற்றொரு பெண் உதவியுடன்அங்கு இருந்தார் . இதனிடையே நேற்று இரவு பிரசவ வலி ஏற்பட்டதைதொடர்ந்து தும்கூர் அரசு மருத்துவமனைக்கு அங்குள்ள தெரிந்தவர்களால் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு ஆஸ்பத்திரிக்கு சென்றதும் அங்கு மருத்துவமனையில் பணியிலிருந்து டாக்டர் உஷா என்பவர் கர்ப்பிணி பெண்ணிடம் தாய்அட்டை மற்றும் ஆதார் அட்டை கேட்டுள்ளார்.

இரண்டு அட்டைகளும் கஸ்தூரியிடம் இல்லாத காரணத்தால் திருப்பி அனுப்பி, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு செல்லுமாறு அனுப்பி வைத்துவிட்டார். ஆனால் பெங்களூர் விக்டோரியா மருத்துவமனைக்கு செல்ல வசதி இல்லாததால் கஸ்தூரி மீண்டும் வீட்டுக்கே வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை பிரசவ வலி ஏற்பட்டு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.

அதிக ரத்தப்போக்கு காரணமாக தாயும் உயிரிழக்க அடுத்தடுத்த சில நிமிடங்களில் இரட்டை ஆண் குழந்தைகளும் உயிரிழந்தன. ஒரே நேரத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் மஞ்சுநாத் நேரடியாக சென்று பார்வையிட்டார்.

அப்போது அங்கிருந்து பொதுமக்கள் டாக்டரின் கவன குறைவால் தான் இந்த உயிரிழப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தினர். இதனையடுத்து டாக்டர் மஞ்சுநாத் அளித்த தகவல்களின் அடிப்படையில் பணியிலிருந்த அரசு டாக்டர் உஷா மற்றும் அங்கு பணியில் இருந்து இரண்டு செவிலியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த ஏழைகர்ப்பினி பெண் ஒருவர் கர்நாடகாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படாததால் வீட்டிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 140 அப்பாவி பொதுமக்களை பலி கொடுத்த பா.ஜ.க அரசு.. அறுந்து தொங்கும் குஜராத் மாடல்: முரசொலி சாடல்!