India

நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்து - கார் : குழந்தை உட்பட 11 பேருக்கு நேர்ந்த சோகம்- நள்ளிரவில் கோரம் !

பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சிறுமி உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ள நிகழ்வு மகாராஷ்டிராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் பைத்துல் நகர் அருகே நேற்று இரவு பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் சென்றுக்கொண்டிருந்தது. இதில் காரில் மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி பகுதிக்கு வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் பயணித்தனர்.

இந்த நிலையில் நள்ளிரவு சுமார் 2 மணியளவில் திடீரென்று எதிர்பாராதவிதமாக இந்த பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் பயணித்த 3 பெண்கள், 5 வயது சிறுமி உட்பட 11 பேரும் சம்பவம் இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழ்ந்தனர்.

இதையடுத்து இந்த கோர விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், மீட்பு குழுவினரை கொண்டு உடல்களை மீட்டனர். பின்னர் அவர்களது உடல்களை உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். மேலும் காயமடைந்தவர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கார் ஓட்டி வந்த ஓட்டுநர் சிறிது தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நள்ளிரவு நடந்த இந்த கோர விபத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததோடு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்குவதாகவும் அறிவித்துள்ளார். நள்ளிரவு நடந்த இந்த கோரவிபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 8 லட்சத்துக்கு கூலிப்படை ஏவி மகனை கொன்ற பெற்றோர்.. கூறிய பகீர் காரணத்தால் தெலங்கானாவில் அதிர்ச்சி !