India
குரங்குகளுக்கு 32 ஏக்கர் நிலத்தை எழுதி வைத்த கிராம மக்கள்.. இதுதான் காரணமாம் ! - மகாராஷ்டிராவில் விநோதம்!
நிலம் என்பது மனிதர்களுக்கு இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. ஒரு நிலத்திற்காக பல போர்கள் அரங்கேறியுள்ளது. அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை நிலத்திற்காக மக்கள் அடித்து கொள்கின்றனர். அப்படி இருக்கையில் இங்கே ஒரு கிராம மக்கள், குரங்குகளுக்கு தங்கள் நிலங்களை எழுதிக்கொடுத்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் உஸ்மனாபாத் பகுதியை அடுத்துள்ள உப்லா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு மக்களுடன் மக்களாக குரங்குகளும் வாழ்ந்து வருகிறது. அந்த குரங்குகள் அனைத்தும் இந்த கிராம மக்களின் குடும்பத்தின் உறுப்பினர் போன்றது என்று அந்த கிராம மக்கள் கருதுகின்றனர்.
இந்த நிலையில் அந்த குரங்குகளுக்கு உணவு கொடுத்து ஆதரவளித்து வரும் இந்த கிராம மக்கள், அதற்கு என்று எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துள்ளனர். எனவே அதற்காக தங்கள் நிலங்களை அதாவது மொத்தம் 32 ஏக்கர் நிலங்களை குரங்குகளுக்காக வழங்கி கெளரவித்துள்ளனர்.
இது குறித்து அந்த கிராம பஞ்சாயத்து தலைவர் கூறுகையில், "இந்த கிராமத்தில் முன் காலத்தில் இருந்தே குரங்குகள் வாழ்ந்து வருகிறது. பண்டிகை, விழாக்கள் போன்ற நேரங்களில் கூட குரங்குகள் எல்லா இடத்திற்கும் வருகை தரும். அது இதுவரை எங்களில் யாரையும் துன்புறுத்தியதில்லை.
தற்போது எங்கள் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் வசித்து வருகிறது. விலங்குகள் ஒரே இடத்தில் இருக்காது என்பதால் கடந்த சில ஆண்டுகளில் குரங்குகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. குரங்குகள் வாழும் நிலத்தில் வனத்துறையினர் தோட்டப்பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கு முன்பு அந்த இடத்தில் ஒரு வீடும் இருந்தது. ஆனால் அது தற்போது இடிந்துவிட்டது. முன்பெல்லாம் இந்த கிராமத்தில் திருமணம் நடந்தால் முதலில் குரங்குகளுக்கென்று தனியாக சடங்குகள் செய்யப்படும். ஆனால் தற்போது அவையெல்லாம் யாரும் பின்பற்றவில்லை" என்றார்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!