India
LKG குழந்தைக்கு முத்தம் கொடுத்து பாலியல் தொல்லை.. பள்ளியின் கார் ஓட்டுநரை கைது செய்த தெலங்கானா போலிஸ்!
தெலங்கானா மாநிலம், பஞ்சாரா ஹில்ஸ் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்படுகிறது. இந்த பள்ளியில் படிக்கும் LKG குழந்தை ஒன்று சில நாட்களாகவே மன அழுத்தத்துடன் இருந்ததை அவரது பெற்றோர்கள் கவனித்துள்ளனர்.
பின்னர் இது பற்றி விசாரித்தபோது குழந்தை கூறிய தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். சில நாட்களாகவே பள்ளியில் ஒருவர் தன்னை முத்தம் கொடுத்து தவறாக நடப்பதாக சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் சிறுமியை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு வந்துள்ளனர். அப்போது சிறுமி அந்த நபரை அடையாளம் காட்டியுள்ளார். அவர் பள்ளியின் தலைமை ஆசிரியரின் கார் ஓட்டுநர் ரஜினி குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து பெற்றோர் அவரை சரமாரியாக பள்ளியிலேயே தாக்கி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து கார் ஓட்டுநரை கைது செய்தனர். மேலும் சிறுமியை ஆலோசனை மையத்திற்கு அனுப்பிவைத்தனர். மேலும் கார் ஓட்டுநர் இதேபோன்று வேறு சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்டுள்ளாரா என்பது குறித்தும் போலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
Also Read
-
“மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு அரசு, பழனிசாமி போல அமைதி காக்க முடியாது!” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
சென்னையில் 3.70 லட்சம் பேருக்கு உணவு! : வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்!
-
“சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை!” : தயாநிதி மாறன் எம்.பி கோரிக்கை!
-
“இதுவரை 9.80 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!” : நேரடி ஆய்வுக்கு பிறகு அமைச்சர் சக்கரபாணி தகவல்!
-
“தந்தை பெரியாரின் இந்த புத்தகத்தை அனைத்து பெண்களும் படிக்க வேண்டும்!” : கனிமொழி எம்.பி பேச்சு!