India
திருநங்கை மீதான காதலில் தெருவில் சண்டையிட்ட இளைஞர்கள்.. இறுதியில் நடந்த சோகம் ! டெல்லியில் அதிர்ச்சி !
டெல்லியைச் சேர்ந்த அனில் என்பவர் சுனிதா என்ற திருநங்கையை காதலித்து வந்துள்ளார். இருவரும் சேர்ந்து சில மாதங்களுக்கு முன்னர் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். அப்போது இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சுனிதா அனிலை விட்டு விலகியுள்ளார்.
சுனிதா அனிலின் வீட்டில் இருந்து செல்லும்போது சுனிதா ரூ. 40 ஆயிரம் பணத்தை எடுத்துச்சென்றதாக கூறப்படுகிறது. எனினும் இது குறித்து அனில் ஏதும் கூறவில்லை. அனிலிடமிருந்து பிரிந்து சென்ற சுனிதா குட்டு என்ற இளைஞரை காதலிக்க தொடங்கியுள்ளார். மேலும் குட்டு மற்றும் இரு திருநங்கைகளிடம் சேர்ந்து தனி வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.
இந்த தகவல் அனிலுக்கு தெரியவந்த நிலையில், ஆவேசமடைந்த அனில் சுனிதா வசித்து வந்த வீட்டுக்கு சென்று தனது 40 ஆயிரம் ரூபாயை திருப்பித் தருமாறு சண்டையிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து சுனிதா, குட்டு, அனில் ஆகிய மூவரும் அந்த இடத்தில் சண்டையிட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த அனில், தான் வைத்திருந்த கத்தியால் சுனிதா, குட்டு இருவரையும் தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த சுனிதா, குட்டு ஆகியோரை அங்கு இருப்பவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து கத்தியோடு இருந்த அனிலை கைது செய்தனர்.
இந்த நிலையில், கத்தியால் தாக்கப்பட்ட குட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் சுனிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அனில் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Also Read
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!
-
“தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி!” : முதலீடுகளை ஈர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
தொடர்ந்து 4 நாட்களாக சசிகாந்த் உண்ணாவிரத போராட்டம்.. முதலமைச்சரின் கோரிக்கைக்கு இணங்க போராட்டம் முடிவு!
-
"நயினார் நாகேந்திரன் தேவையில்லாமல் வாயை கொடுத்து மாட்டிக்கொள்கிறார்" - அமைச்சர் TRB ராஜா பதிலடி !