India

2,500 பேர் திடீர் பணிநீக்கம்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்..BYJU'S நிறுவனத்தின் அதிரடி முடிவின் பின்னணி என்ன?

கொரோனா காலகட்டத்திற்கு பின்பு தனியார் நிறுவனம் தங்கள் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி வந்தனர். அதே போல் உலகின் முன்னணி கார்ப்ரேட் நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் கூட தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

அதோடு முகநூல் நிறுவனமான மெட்டாவும், தங்களது ஊழியர்கள் 12 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அதிர்ச்சி தகவல் கடந்த வாரம் வெளியானது. கொரோனா மட்டுமல்லாமல், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய உக்ரைன் - ரஷ்யா போரின் காரணமாக உலகளவில் பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டது.

இந்த நிலையில் நாட்டின் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் பைஜூஸ் (BYJU'S) தங்களது வருவாயை பெருக்க புதிய வழியை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது நாட்டின் முன்னணி இணையவழி கல்வி நிறுவனமான(Edutech) BYJU'S நிறுவனம் தங்கள் பெருக்குவதற்காக சுமார் 2,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் இணை நிறுவனரான திவ்யா கோகுல்நாத் தெரிவித்தாவது, "2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வருவாய் அதிகரிப்பை மேற்கொண்டு லாபம் மிக்க நிறுவனமாக பைஜூஸ்-ஐ உருவாக்க திட்டமிட்டுள்ளோம். எனவே, அடுத்த ஆறு மாதத்திற்குள் 5% ஊழியர்கள் அதாவது சுமார் 2,500 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

இதன் மூலம் நிறுவனத்தில் போலியான ரோல்களில் உள்ளவர்கள்,தனி நபரின் வேலை திறன், சீரான தொழில்நுட்ப பயன்பாடு ஆகியவை உறுதி செய்யப்படும்" என்றார். இந்த தகவல் தற்போது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 'Work form Home' போய் 'Work from Pub'- இங்கிலாந்தில் ட்ரெண்டாகும் புதிய வேலை: என்னென்ன வசதிகள் தெரியுமா?