India
வீட்டை விட்டு வெளியேறிய மனைவி.. ஆத்திரத்தில் மனைவிக்கு வைத்த பொறியில் சிக்கிய மாமியார்.. நடந்தது என்ன ?
மத்தியப் பிரதேச மாநிலம், பெதுல் மாவட்டம், சாய்கேடா கிராமத்தில் வசித்து வந்த ஒரு தம்பதிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.இந்த தம்பதியில் அந்த கணவர் மதுபோதைக்கு அடிமையாக மனைவியை அடிக்கடி அடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த சண்டை ஒருநாள் முற்றியதில் கணவர் மீது கோவம் கொண்ட மனைவி கணவரோடு சண்டைபோட்டு தனது தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார். மனைவியின் செயலால் அதிர்ச்சி அடைந்த அவர் அவரை கொலை செய்யவேண்டும் என்று வெறியோடு இருந்துள்ளார்.
இதற்காக மனைவி வசித்துவரும் அவரின் தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு யாரும் இல்லாததை பயன்படுத்திக்கொண்ட அவர், வீட்டின் நுழைவாயிலில் இருக்கும் இரும்பு கேட்டில் வயர் மூலம் மின்சாரத்தை செலுத்தியுள்ளார். அதில் கைவைக்கும் போது மின்சாரம் பாய்ந்து அவர் இறந்துவிடுவார் என நினைத்து இப்படி செய்துள்ளார்.
ஆனால் எதிர்பாராத விதமாக மனைவியின் தாய் அந்த இருப்பு கேட்டை தொட்டுள்ளார். இதில் உடலில் மின்சாரம் பாய்ந்த அவர் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதைக் கண்ட அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இது குறித்து போலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அவர்கள் நடத்திய விசாரணையில் இந்த செயலை செய்தது அந்த பெண்ணின் கணவர் என்பது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து தலைமறைவான அவரை போலிஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை... சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கிய மேயர் பிரியா !
-
120- க்கும் மேற்பட்ட தொலைந்த மொபைல் போன்களை மீட்டெடுத்த ரயில்வே துறை... சாத்தியமானது எப்படி ?
-
"SIR குறித்து மக்கள் ஏமாந்துவிடாமல் எச்சரிக்கை மணியடிப்பது மிகமிகத் தேவை" - தி.க தலைவர் கி.வீரமணி !
-
Reels மோகம் : தண்டவாளத்தில் 2 நண்பர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
-
2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!