India
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 15 சிறுமி தீ வைத்து எரிப்பு.. பா.ஜ.க ஆளும் உ.பி-யில் கொடூரம்!
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பரிசோதனை செய்ததில் சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
இது குறித்து சிறுமியிடம் கேட்டபோது, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிவித்துள்ளார். இது பற்றி அந்த இளைஞரின் தாய் மற்றும் சகோதரிக்கு தெரியவந்துள்ளது.
பின்னர் அவர்கள் சிறுமியிடம் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளனர். இவர்களை நம்பிய சிறுமியும் சென்றுள்ளார். இதையடுத்து சிறுமியை தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர்.
பிறகு சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிறுமிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சிறுமியை தீ வைத்துக் கொளுத்திய தாய் மற்றும் சகோதரியை போலிஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இளைஞரை போலிஸார் தேடி வருகின்றனர்.
Also Read
-
சென்னையில் 4.09 லட்சம் பேருக்கு உணவு! : தமிழ்நாடு அரசின் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
-
பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயார் : களத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தி.மு.க - காங்கிரஸ் உறவு நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
மனிதாபிமானமற்று செயல்படும் பா.ஜ.க அரசு : பெண் மருத்துவர் மரணம் - ராகுல் காந்தி விமர்சனம்!
-
ஏன் வெளியே சென்றார்கள் : ஆஸ்திரேலிய வீரர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் - பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு!