India
லிப்ட் கேட்டு காரில் ஏறிய இளம்பெண் பாலியல் பலாத்காரம் ! -உ.பி-யில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம் !
உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்புரின் ஜெய்சிங்பூர் பகுதியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் 23 வயதான மாணவி ஒருவர் பொறியியல் கல்லூரியில் பி.டெக் படித்து வந்துள்ளார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கல்லூரி முடிந்து வீடு திரும்ப தாமதமாகியுள்ளது.
இதன் காரணமாக அந்த வழியே வந்த ஒரு காரில் லிப்ட் கேட்டு ஏறிச்சென்றுள்ளார். கார் சிறிது தூரம் சென்றநிலையில் காரை ஓட்டி வந்த நபர் காருக்குள் வைத்து அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவி காரிலேயே மயக்கமடைந்துள்ளார். பின்னர் கார் ஓட்டுனர் அந்த பெண்ணை வழியில் இருந்த கால்வாயில் வீசிச்சென்றுள்ளார்.
சிறிது நேரத்துக்கு பின்னர் நினைவுக்கு வந்த அந்த மாணவி வீட்டுக்கு வந்து தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், இது குறித்து போலிஸில் புகார் அளித்துள்ளனர்.
அதன்படி போலிஸார் வழக்கு பதிவு செய்து இது தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Also Read
-
“நானே ஜெயித்ததுபோல இருக்கு”: SBI வங்கி தேர்வில் வெற்றி பெற்ற கமலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
இவ்வளவு கொடூரமான ஒரு மனிதனுக்கு எப்படி ஜாமீன் கிடைக்கும்? : சுப்ரியா சுலே MP கேள்வி!
-
“எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகள்..”: கிறிஸ்தவர்களை தாக்கும் இந்துத்வ கும்பல் - முதலமைச்சர் கண்டனம்!
-
கிறிஸ்தவர்களைக் குறிவைத்து தாக்கும் இந்துத்துவ கும்பல் : அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!
-
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை: 2 மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு.. திறந்து வைக்கப்படும் திட்டங்கள்? விவரம்