India
வெடித்து சிதறிய LED டிவி.. குடும்பத்தோடு மகிழ்ச்சியாக அமர்ந்திருந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம் !
உத்தரபிரதேசம் காஜியாபாத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் ஒன்றாக டி.வி. பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த எல்.இ.டி. டிவி வெடித்து சிதறியது. இதில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தூக்கி எறியப்பட்டனர்.
வெடிச்சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் வந்து பார்த்தபோது படுகாயங்களுடன் குடும்பத்தினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
அவர்களை மீட்ட தீயணைப்புத்துறையினர் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி 16 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், சிறுவனின் தாய், மைத்துனர், நண்பர் ஆகிய பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக பேசிய அதே குடும்பத்தை சேர்ந்த ஒருவர், ''வெடி விபத்து நடந்தபோது தான் வேறொரு அறையில் இருந்தேன். வெடி சத்தத்தால் வீடு குலுங்கியது. சுவர் இடிந்து விழுந்தது'' என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
100-வது நாளை நெருங்கும் பிக்பாஸ் வீடு; கராசார பொங்கல் விருந்துக்கு தயாராகும் போட்டியாளர்கள்!
-
90 அணைகளை கண்காணிக்க : ஒருங்கிணைந்த மேலாண்மை மைய கட்டடத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
பொங்கல் திருநாள்; 34,087 சிறப்பு பேருந்துகள் இயக்கம் : உங்க ஊர் பேருந்து எங்கே நிற்கும் தெரியுமா?
-
திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான தீர்ப்பு : அமைச்சர் ரகுபதி பேட்டி!
-
”உங்க கனவை சொல்லுங்கள்” தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் : அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன முக்கிய தகவல்!