India
திருமணம் நடக்காததால் ஆத்திரம்.. திருமண பூஜை நடத்திய பூசாரியின் காதை கடித்த இளைஞர்.. ம.பி-யில் அதிர்ச்சி !
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் லக்ஷ்மி காந்த் சர்மா. இவருக்கு விபுல் மற்றும் அருண் என்ற இரு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் நீண்ட காலம் தள்ளிச் சென்றுள்ளது. இது லக்ஷ்மி காந்த் சர்மாவுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து வீட்டில் சத்திய நாராயணா பூஜை செய்தால் திருமணம் நடக்கும் என்று சிலர் கூறியுள்ளனர். இதனால் மகன்களுக்கு விரைவாக திருமணம் நடக்க வேண்டும் என்ற நோக்கில் ராஜஸ்தானின் கோட்டா என்ற பகுதியைச் சேர்ந்த குஞ்ச்பீகாரி சர்மா என்ற புரோஹிதரை அழைத்து தனது வீட்டில் சத்திய நாராயணா பூஜையை செய்துள்ளார்.
இந்த பூஜை நடந்து பல மாதங்கள் ஆகியும் இவரது மகன்களுக்கு திருமணம் நடைபெறாமல் இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த லக்ஷ்மி காந்த் மகன்களுடன் தனது வீட்டில் பூஜை நடத்திய குஞ்ச்பீகாரி சர்மா என்ற புரோஹிதரின் வீட்டுக்கு சென்று இது குறித்து கோவத்தோடு பேசியுள்ளார்.
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த லக்ஷ்மி காந்த் பூஜையை ஒழுங்காக செய்யாததால்தான் அதற்குரிய பலன் ஒழுங்காக கிடைக்கவில்லை என்று கூறி போசரியை கொடூரமாக தாக்கியுள்ளார். அப்போது லக்ஷ்மி காந்த்தின் மகனான விபுல் ஆத்திரத்தில் அந்த புரோஹிதரின் காதை கடித்துள்ளார்.
பூசாரியின் கதறலை கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பூசாரியை மீது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதைத் தொடர்ந்து இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், லக்ஷ்மி காந்த் மற்றும் அவரின் இரு மகன்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Also Read
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!