India
சிறைக்கைதிகளுக்கு 4 நாட்களுக்கு சிக்கன், மட்டன் மஜா விருந்து.. கொல்கத்தா சிறையில் இது தான் பாரம்பரியமாம்!
கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நவராத்திரி நாடு முழுவதும் 9 நாட்கள் கொண்டாடப்படும். நாடு முழுவதும் இந்த விழாவை மக்கள் கொண்டாடி வரும் நிலையில் வட இந்திய மக்கள் தாண்டியா, கர்பா போன்ற நடனங்களை ஆடியும், பூஜைகள் செய்தும் கோலாகலமாக கொண்டாடி வருவர்.
அந்த வகையில் மேற்கு வங்க மாநிலத்தில் இந்த துர்கா பூஜையை வெகு விமர்சியாக மக்கள் கொண்டாடி வரும் நிலையில், அங்குள்ள சிறைக்கைதிகளுக்கு சிறை நிர்வாகம் சார்பில் சைவ, அசைவ விருந்து கொடுத்து அவர்களை மகிழ்வித்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் Presidency Central Correctional Home என்ற சிறையில் உள்ள சுமார் 2500-க்கும் மேற்பட்ட சிறைக்கைதிகளுக்கு காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 2-ம் தேதி முதல், விஜயதசமி நாளான அக்டோபர் 5-ம் தேதி வரை சிறப்பு சாப்பாடு வழங்கி வருகின்றனர். இதில் நேற்று (அக்.,03) மட்டும் சைவ விருந்து வழங்கப்பட்டிருக்கிறது.
சிறைக்கைதிகளுக்கு வழங்கப்படும் விருந்துகளில் அசைவத்தில் சிக்கன், மட்டன் பிரியாணி, மீன், இறால் போன்றவைகளும், சைவத்தில் லுச்சி, கிச்சுரி, புலாவ், தம் ஆலு, பன்னீர் மசாலா போன்றவைகளும் வழங்ப்பட்டு வருகின்றன.
இது போன்று விருந்து உபசரிப்பை அம்மாநிலத்தில் ஆண்டுதோறும் பாரம்பரியமாய் கடைபிடிப்பது வழக்கமாகும். எனவே இந்த ஆண்டும் இதே போன்று சிறைக்கைதிகளுக்கு விருந்து கொடுத்து மகிழ்வித்து வருகின்றனர்.
Also Read
-
நீதித்துறையை விமர்சித்த சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு! : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
-
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மிக பெரிய வரலாறு இது" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம் !
-
”அரசாங்கத்தின் மூலதனம் பொதுப்பணித்துறை” : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
"கேள்வி கேட்பது தேசத்துரோகமாக கருதப்பட்டால் ஜனநாயகம் இருக்காது" - பாஜக அரசுக்கு முதலமைச்சர் கண்டனம் !
-
"ஆளுநர்கள் மசோதாக்கள் மீது தங்களது தனி விருப்பத்தை பயன்படுத்துகின்றனர்" - உச்சநீதிமன்றம் அதிருப்தி !