India

தந்தையை கொலை செய்து நாடகமாடிய மகன்கள்.. காட்டிக்கொடுத்த சகோதரி.. பின்னணி என்ன ?

உத்தரபிரதேச மாநிலம் கோசைங்கன்ஜ் என்ற பகுதியில் வசித்து வந்தவர் ரமேஷ் சந்திர ராவத் (வயது 50). விவசாய தொழில் செய்து வந்த இவருக்கு ஒரு மகள் மற்றும் அவதேஷ் (வயது 29), ரஜ்னேஷ் (வயது 25) என்ற 2 மகன்களும் உள்ளனர். இதில் அவதேஷுக்கு திருமணமாகி தற்போது கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

இந்த நிலையில் தந்தை ரமேஷுக்கு பெண் குழந்தைகள் என்றால் பிடிக்காமல் இருந்திருக்கிறது. இதனால் இவர்கள் குடும்பத்திற்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்படி சம்பவத்தன்று மதுப்பழக்கத்திற்கு அடிமையான ரமேஷ், குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது தனது மகனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த பெண் குழந்தையை எங்கேயாவது கொண்டு போய் விடு அல்லது கொன்று விடு என்று கூறி சண்டையிட்டுள்ளார். இதனால் இருவருக்குள்ளும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தந்தை ரமேஷ், தனது பேத்தி என்றும் பாராமல் அவரை கழுத்தை நெறித்து கொல்ல முயன்றுள்ளார்.

இதனை கண்ட இரு மகன்களும் தந்தையை தடுக்க முயன்றனர். ஆனால் அது முடியவில்லை என்பதால் கோபமடைந்த ஒரு மகன் அருகில் இருந்த கத்தியை எடுத்து தனது தந்தையின் கழுத்தை மறுத்துள்ளார். இதில் இரத்த வெள்ளத்தில் கிடந்த தந்தை ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களிடம் தங்களது தந்தையை யாரோ முன்பாக காரணமாக கழுத்தை அறுத்து கொன்று விட்டதாக நாடகமாடினர். ஆனால் ரமேஷின் மகளோ, தனது தந்தையை கொன்றது தனது சகோதரர்கள் என்ற உண்மையை காவல்துறையிடம் தெரிவித்து விட்டார்.

இதனையடுத்து அவர்கள் இருவர் மீது கொலைவழக்கு பதிவுசெய்த அதிகாரிகள், அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். பிஞ்சு பெண் குழந்தையை கொல்ல முயன்ற தந்தையை, மகனே கொன்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பெண் நீதிபதியை மிரட்டிய விவகாரம்.. நேரில் மன்னிப்பு கேட்ட முன்னாள் பிரதமர்.. என்ன நடந்தது ?