India
நள்ளிரவில் கண்விழித்து அதிர்ந்த பெண்கள்.. தங்கும் விடுதியில் தூங்கிக்கொண்டிருந்தபோது நேர்ந்த அதிர்ச்சி !
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் காண்ட்வா மாவட்டத்துக்கு வேலை காரணமாக 35 மற்றும் 25 வயதுடைய இரண்டு பெண்கள் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்த ஹோட்டலில் அறை எடுத்து இருவரும் தங்கியுள்ளனர்.
அப்போது நள்ளிரவில் இரண்டு பெண்களில் ஒருவர் எதேச்சையாக கண்விழித்துள்ளார். அப்போது தாங்கள் உறங்கிய கட்டிலில் இன்னொருவர் யாரோ உறங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் அவர் ஒரு ஆண் என்பதை கண்டு அலறியுள்ளார்.
இதன் பின்னர் அந்த ஆண் உடனடியாக அந்த அறையில் இருந்து வெளியேறியுள்ளார். இதன் பின்னர் அந்த இரண்டு பெண்களும் இதுகுறித்து காவல்நிலையத்துக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதன் பின்னர் சம்பவ இடத்துக்கு வந்து ஹோட்டலில் விசாரணை நடத்தியுள்ளனர்.
பின்னர் ஹோட்டலில் வேலை செய்யும் பணியாளர்களை வரிசையாக நிறுத்திவைத்து அந்த பெண்களை வைத்து அடையாளம் காண கூறியுள்ளனர். அப்போது அந்த பணியாளரின் ஒருவர்தான் தங்கள் அறைக்கு வந்தவர் என என அந்த பெண் அடையாளம் காட்டியுள்ளார்.
பின்னர் போலிஸார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவர் பெயர் பலிராம் (வயது 22) என்பதும், பெண்கள் இருக்கும் அறையில் ஜன்னல் வழியாக நுழைந்ததும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!