India
காதலியின் பிணத்தை ஆம்புலன்சில் கடத்திய காதலன்.. சினிமா பாணியில் சுற்றிவளைத்து மடக்கி பிடித்த காவல்துறை..
மகாராஷ்டிரா மாநிலம் கல்யான் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சதாம் சையத் (வயது 30). இவரும் அதே பகுதியை சேர்ந்த கவிதா (வயது 22) என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். மேலும் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இருப்பினும் இவர்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி அதிகாலை சுமார் 4 மணியளவில் இவர்கள் இருவருக்குள்ளும் ஏதோ சண்டை வந்துள்ளது. இது கடும் வாக்குவாத்தமாக மரியாதையடுத்து கோபமடைந்த சதாம், தனது காதலி கவிதாவின் கழுத்தை இறுக்கமாக நெரித்துள்ளார். இதில் மூச்சுத்திணறி கவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து பதற்றமடைந்த சதாம், கவிதாவின் சடலத்தை மறைக்க வேண்டுமென்று ஒரு ஆம்புலன்சை ஏற்பாடு செய்து அதில் கடத்தியுள்ளார். சதாம் கவிதாவின் சடலத்தை கொண்டு செல்வதை கண்ட அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பிறகு அவர்கள் ஆம்புலன்சில் தப்பி சென்ற சதாமை பிடிக்க தீவிரம் காட்டினர்.
இதைத்தொடர்ந்து புனே அடுத்த பிஜாப்பூர் நோக்கி ஆம்புலன்ஸ் செல்வதாக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் சதாமை கைது செய்ததோடு, கவிதாவின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் சதாம் மீது கொலை மற்றும் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் கீழ் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலியை கொன்று அவரது சடலத்தை காதலனே கடத்தி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
Welcome On Board... இந்தா வச்சுக்கோ... அரசுப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தும் விஜய் படக்குழுவினர்!
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!