தமிழ்நாடு

நேருக்கு நேர் மோதிய பைக்குகள்.. சம்பவ இடத்திலேயே பலியான தாய் - மகன்.. சேலத்தில் சோகம் !

இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் லாரி மோதி தாய் மற்றும் மகன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் மேட்டூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேருக்கு நேர் மோதிய பைக்குகள்.. சம்பவ இடத்திலேயே பலியான தாய் - மகன்.. சேலத்தில் சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதி அருகே உள்ள மாட்டுக்காரனுர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 52). இவர், நேற்று தனது மனைவி அன்னபூரணி (வயது 40), மகன் மைதீஷ் (வயது 12) ஆகியோரை அழைத்துக்கொண்டு மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோயிலுக்கு பைக்கில் சென்றுள்ளனர்.

late Mr. Rajendhran
late Mr. Rajendhran

அங்கே கோயிலில் சாமி கும்பிட்ட பிறகு அதே பைக்கில் மாலை நேரத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் மேச்சேரி பகுதிக்கு அருகே உள்ள குள்ளமடையானூர் என்ற இடத்திற்கு வந்தபோது எதிர்பாராதவிதமாக, இவர்களுக்கு எதிரே வந்த ராஜேந்திரன் என்பவர் ஓட்டி வந்த மற்றொரு பைக் மீது மோதியுள்ளார்.

அந்த இரு வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் மூர்த்தியின் மனைவி மற்றும் மகன் தள்ளி விழுந்துள்ளனர். அப்போது பின்னால் வந்த வேறொரு லாரி போன்ற பெரிய வாகனம் அவர்கள் இருவர் மீதும் ஏறியதால் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

நேருக்கு நேர் மோதிய பைக்குகள்.. சம்பவ இடத்திலேயே பலியான தாய் - மகன்.. சேலத்தில் சோகம் !

பின்னர் சம்பவ இடத்திற்கு தகவலறிந்து வந்த காவல்துறையினர் விபத்தில் படுகாயமடைந்த மூர்த்தி மற்றும் ராஜேந்திரனை மீட்டு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது கொண்டு செல்லும் வழியிலேஏ ராஜேந்திரன் உயிரிழந்தார்.

இதையடுத்து உயிரிழந்த ராஜேந்திரன் மற்றும் மூர்த்தியின் மனைவி, மகன் ஆகிய மூவரின் உடலையும் மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories