India
ம.பி: பழங்குடியின சிறுமியின் அழுக்கு ஆடையை துவைத்த ஆசிரியர் சஸ்பெண்ட்..நல்லது செய்ய நினைத்து நடந்த சோகம்!
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாதோல் மாவட்டத்தின் பாரா காலா என்ற இடத்தில் அரசு தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் பழங்குடியின மாணவி ஒருவர் அழுக்கான சீருடையை அணிந்து வந்துள்ளார்.
இதனைக் கண்ட அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் சிராவன் குமார் திரிபாதி என்பவர் மற்ற மாணவிகளின் முன்னிலையில் அந்த மனைவியின் அழுக்கு சீருடையை கழற்ற வைத்துள்ளார். பின்னர் அந்த மாணவியின் துணியை தானே துவைத்தும் கொடுத்துள்ளார்.
அந்த துணி காயும் வரை அந்த மாணவி சுமார் 2 மணி நேரம் உள்ளாடைகளுடன் அணிந்து பள்ளியிலேயே இருத்தள்ளார். இதனை அங்கு இருந்தவர்கள் புகைப்படம் எடுத்து வெளியிட்ட நிலையில், இது வைரலாகியுள்ளது. இந்த சம்பவத்துக்கு அந்த மாணவியின் கிராம மக்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் அதிகாரிகளை எட்டிய நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் சிராவன் குமார் திரிபாதி சஸ்பெண்ட் செய்யப்பட்டு இது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்களை அந்த ஆசிரியர் பழங்குடியினர் விவகாரங்கள் துறையின் வாட்ஸ் அப் குரூப்பில் பகிர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மாணவர்கள் மற்றும் அவர்களின் தூய்மையில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதை காட்டவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவுமே இந்த செயல்களை செய்ததாக அந்த ஆசிரியர் கூறியுள்ளார். இந்த சம்பவம் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!