India
மாநிலம் விட்டு மாநிலம் வந்து திருட்டு.. 20 ஆயிரம் மதிப்புடைய பொருளை 1000-க்கு விற்றதால் சிக்கிய திருடன் !
பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். 32 வயதுடைய இவர் சில பிரச்னை காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு சண்டிகர் மாநிலம் ராய்பூர் பகுதிக்கு இடம்பெயர்ந்தார். அங்கே ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், போதைக்கு அடிமையானதால் அந்த வேலையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இதையடுத்து பொழப்புக்கு என்ன செய்வதென்று யோசித்து வந்த இவர், அதற்காக சைக்கிள்களை திருட முடிவு செய்துள்ளார். அதன்படி ஹரியானா மாநிலத்திற்கு இடப்பெயர்ந்த இவர், உயர் ரக சைக்கிள்களை திருடி வந்துள்ளார்.
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற பழமொழிக்கு ஏற்ப, இப்படி பல மாதங்களாக திருடி வந்த திருடன் தற்போது வசமாக காவல்துறையில் சிக்கியுள்ளார். அதாவது தொடர்ந்து உயர் ரக சைக்கிள்களை பார்த்து திருடி வந்த இவர், அதனை மிகவும் மலிவான விலைக்கு விற்று வந்துள்ளார். இதனால் ஒரு முறை சந்தேகமடைந்த நபர் ஒருவர் காவல்துறையில் தெரிவிக்கையில் அவர்கள் சிசிடிவி காட்சிகள் மூலம் ரவிக்குமாரை அடையாளம் கண்டனர்.
பிறகு அவர்கள் ரவிக்குமாரை சுற்றிவளைத்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து சுமார் 62 சைக்கிள்களை பறிமுதல் செய்துள்ளனர். அவைகளில் பல ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம் மதிப்புடையதாகும். அவைகளை ரவிக்குமார் வெறும் ரூ.2000 ஆயிரம், ரூ.1500-க்கு விற்று வந்துள்ளார்.
மேலும் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அங்குள்ள பஞ்ச்குலா என்ற பகுதியை சுற்றியிருக்கும் பல்வேறு பகுதிகளில் காணாமல் போன சைக்கிள்கள் அனைத்தும் ரவிக்குமார் திருடியதும், கடைசியாக கடந்த செப்டம்பர் 14-ம் தேதி செக்டார் 26 பகுதியில் இருந்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சைக்கிளை திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். உயர் ரக சைக்கிள்களை திருடி மலிவான விலையில் விற்று வந்த திருடனை புகார் எழுந்த நான்கு நாட்களில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!