India
மும்பை : குழந்தையை தத்துக்கொடுக்க மறுத்த மனைவி.. ஆத்திரத்தில் குடும்பத்தோடு கணவர் செய்த கொடூரம் !
கடந்த ஆண்டு, ஜூலை மாதம் மும்பை அருகிலுள்ள கடற்கரையில் சூட்கேஸில் பெண் ஒருவரின் உடல் கிடந்துள்ளது. அதை சோதனை செய்தபோது அதில் தலை இல்லாமல் இருந்துள்ளது. இதனைக் தொடர்ந்து இதுதொடர்பாக போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.
6 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தியும் தகவல் ஏதும் இல்லாததால் முக்கிய ரயில் நிலையங்கங்களில் இது குறித்த அறிவிப்பு பலகை வைத்தனர். எனினும் ஒரு வருடம் கடந்த பின்னரும் இந்த விவகாரத்தில் போலிஸாருக்கு தகவல் ஏதும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி சானியா என்ற பெண்ணைக் காணவில்லை என்று கூறி அவர் உறவினர்கள் போலீஸில் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து ஒரு வருடத்துக்கு முன்னர் கிடைத்த சடலத்தின் புகைப்படத்தை வைத்து உறவினர்களிடம் கேள்வி எழுப்பியபோது அந்த பெண் அவரை போல இருப்பதாக கூறியுள்ளனர்.
அதன் பின்னர், போலிஸார் நடத்திய விசாரணையில், சானியாவின் கணவர் ஆசிப் தாங்கள் பழைய வீட்டை விற்றுவிட்டு மும்ப்ரா என்ற இடத்துக்கு வந்துவிட்டதாகவும். சானியா யாருடனோ ஓடிப்போய்விட்டதாகவும், ஓராண்டாகக் காணவில்லை என்றும் கூறியுள்ளார். பின்னர் அந்த சடலத்தின் DNA-வோடு சானியாவின் மகள் DNA-வை வைத்து சோதனை நடத்தியதில் அந்த சடலம் சானியாவுடையது என்பது தெரியவந்தது. இதனால் போலிஸாருக்கு சானியாவின் கணவர் மீது சந்தேகம் எழுந்து அவரிடம் விசாரணை நடத்தியபோது அதிர்ச்சி உண்மைகள் வெளிவந்துள்ளது.
விசாரணையில், கணவரே மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். தங்கள் மகளை ஆசிப் தன்னுடைய குழந்தை இல்லாத சகோதரியிடம் கொடுக்கும்படி கூறியுள்ளார். ஆனால் இதற்கு சானியா மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிப் சானியாவை தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கை கால்களை கட்டி தண்ணீர்த் தொட்டிக்குள் போட்டு கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர்.
பின்னர் சானியாவின் கழுத்தை அவரது மாமனார் அறுத்து போலிஸ் கண்டுபிடிக்கக்கூடாது என்பதற்காக தலையில் இருந்த முடியை அப்புறப்படுத்தியிருக்கின்றனர். இதுமட்டுமின்றி மைத்துனர் உதவியுடன் ஆசிப் மனைவியின் உடலை சூட்கேஸில் அடைந்து கடற்கரையில் வீசி தலையை கடலில் வீசியுள்ளனர். இந்தக் கொலை தொடர்பாக கணவர் ஆசிப், அவர் மூத்த சகோதரர், பெற்றோர் ஆகியோரை போலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்த சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
162 அடுக்குமாடி குடியிருப்பு முதல் பெண்களுக்கான Gym வரை... கொளத்தூரில் இடைவிடாது சுற்றி சுழன்ற முதல்வர்!
-
கொளத்தூரில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம் : 2 இறகுப்பந்து ஆடுகளங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் என்ன?
-
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!