India
மனைவியின் கையை துண்டாக வெட்டிய கொடூர கணவன்.. கேரளாவில் பகீர் சம்பவம்!
கேரள மாநிலம், எழாம்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவருக்கு வித்யா என்ற பெண்ணுடன் ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து தம்பதிகள் ஒரு வருடம் மட்டுமே சேர்ந்த வாழ்ந்துள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட அடிக்கடி சண்டை ஏற்பட்டதால் கணவனைப் பிரிந்த 5 வருடங்களாக மனைவி வித்யா தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், சனிக்கிழமையன்று இரவு மனைவியின் வீட்டிற்கு வந்த சந்தோஷ் திடீரென அவரை தாக்கியுள்ளார். மேலும் அவர் மறைத்து எடுத்து வந்த கத்தியை எடுத்து வித்தியாவின் இரண்டு கையையும் துண்டாக வெட்டியுள்ளார்.
இதைத் தடுக்க முயன்ற அவரது தந்தையையும் சந்தோஷ் தாக்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து அவர் சந்தோஷ் தப்பிச் சென்றுள்ளார். பிறகு அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து சந்தோஷை தேடிவந்தனர். பின்னர் அவரது செல்போன் சிக்னலை கொண்டு தலைமறைவாக இருந்து சந்தோஷை போலிஸார் கைது செய்துள்ளனர்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!