India
குடித்து விட்டு வகுப்பறைக்கு வந்த பெண் ஆசிரியர்.. மேஜையில் இருந்த மதுபாட்டில்கள்: கர்நாடகாவில் அதிர்ச்சி!
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் கங்கலக்ஷ்மம்மா. இவர் கடந்த 5 ஆண்டுகளாக மதுவுக்கு அடிமையாகியுள்ளார்.
மேலும் குடித்து விட்டு மாணவர்களுக்குப் பாடம் எடுத்து வந்துள்ளார். இதனால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இது பற்றி அறிந்தும் சக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அவரை எச்சரித்துள்ளனர்.
ஆனால் அவர் தொடர்ந்து குடித்துவிட்டே பள்ளிக்கு வந்து சென்றுள்ளார். இதனால் இவர் மீது பெற்றோர்கள் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு செய்தனர்.
அப்போது ஆசிரியர் கங்கலக்ஷ்மம்மா மேஜையின் டிராயரை திறந்துபார்க்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தினர். பின்னர் திறந்துபார்ததபோது அதில் மது பாட்டில்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
Also Read
-
”மாற்றுத்திறனாளிகளின் ஒளிமயமான வாழ்வுக்கு நாம் அனைவரும் பாடுபடுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் : தமிழ்நாடு முழுவதும் 9,86,732 பேர் பயன்!
-
கனமழையில் இருந்தும் உள்ளூர் மக்களை மட்டுமல்ல; கடல் கடந்து சென்றவர்களையும் காத்த தமிழ்நாடு அரசு : முரசொலி!
-
டிட்வா புயல் : சென்னை கட்டுபாட்டு மையம், புரசைவாக்கத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
IT ஊழியர்கள் பணிச்சுமை குறித்த கேள்வி.. ஆய்வுகள் இல்லை என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் - சு.வெ. விமர்சனம்!