அரசியல்

”விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமே சாவர்க்கர் விழா போல கொண்டாடும் பா.ஜ.க கூட்டம்”: சிலந்தி தாக்கு!

சாவர்க்கரை அவதாரப் புருஷராக்க பி.ஜே.பி அரங்கேற்றும் நாடகங்கள் என்ற தலைப்பில் முரசொலியில் வெளிவந்துள்ள சிலந்தி கட்டுரை.

”விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமே சாவர்க்கர் விழா போல கொண்டாடும் பா.ஜ.க கூட்டம்”: சிலந்தி தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சாவர்க்கரை ஒரு அவதாரப் புருஷராக்கும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. கூட்டம் பெரு முயற்சிகளில் இறங்கியுள்ளது.

பி.ஜே.பி. ஆளும் கர்நாடக மாநிலத் தில் எட்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில், "வி.டி.சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருந்தபோது, அவர் அடைக்கப்பட்டி ருந்த அறையில் ஒரு சாவித் துவாரம் கூட இல்லை “என்றும்" ஆனால் அந்த அறைக்கு ‘புல்புல்' பறவைகள் வந்து செல்வதுண்டு. சாவர்க்கர் அந்த புல்புல்' பறவையின் இறகுகளில் ஏறி ஒவ்வொரு நாளும் தன் தாய்நாட்டை, தரிசித்து வருவார்" என்றும் ஒரு கருத்து இடம் பெற்றுள்ளது. அதாவது, கர்நாடக பள்ளி மாணவர்கள் காதிலே முழமுழமாக பூவைச் சுற்றினர்.

எதிர்க்கட்சிகள் இதனைக் கண்டித் தனர்; நடந்திருக்குமா? நடக்கக் கூடியதா? என்றெல்லாம் சிந்தனைக்கு இடம் கொடுத்த பொதுமக்கள், இதனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தனர்!

வெள்ளையனை எதிர்த்துப் போராடிய திப்பு சுல்தான் வரலாறு பாடப் புத்தகத்தி லிருந்து நீக்கப்படுகிறது! ஆனால், சிறை யிலிருந்து விடுதலை பெற வெள்ளைய னுக்குச் சேவகம் செய்கிறேன் என்று, ஒருமுறை அல்ல; பலமுறை கருணை மனு போட்டு வெளியே வந்து வெள்ளை யனுக்கு வால்பிடித்த ஒரு நபரை அவதாரப் புருஷராக்க முயற்சிக் கிறார்கள்!

”விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமே சாவர்க்கர் விழா போல கொண்டாடும் பா.ஜ.க கூட்டம்”: சிலந்தி தாக்கு!

சாவர்க்கர், அந்தமான் சிறைச் சாலையிலிருந்து “புல்புல்' பறவையின் சிறகில் ஏறிப் பயணித்தது குறித்து. எழுதிய எழுத்தாளர் கே.டி.கட்டி உடல்நிலை குன்றி இருப்பதால், அவர் சார்பில் விளக்கம் ஒன்றினை அவரது துணைவியார் தந்து, அது ஏடுகளிலும் வெளிவந்துள்ளது. அந்த "புல்புல்' சாவர்க்கரை சுமந்து சென்றது என்பது,

எழுத்தாளரின் கற்பனையில் உதித்தது என்றும், அது உருவகம் (Metaphor) தவிர்த்து வேறல்ல; அது சரித்திர உண்மையல்ல என்றும் விளக்கம் தந்துள்ளார்!

ஆரம்பத்தில் இப்படிக் கட்டுக்கதை கள் உருவக ஓவியங்கள் தீட்டி அதைப் பரவவிட்டு, மக்களை படிப்படியாக நம்ப வைத்து பின்னர் அந்த நபரை “மகான் என்றும், “மனிதரில் புனிதர் என்றும் 'இவரைப் போன்றோரை நாம் பெற்றிட என்ன மாதவம் செய்தோமோ?' என்றும் கூறி, இறுதியில், இறைவனின் மறு அவதாரமாக அந்த நபரை சிருஷ்டித்து விடுவதும், அப்பாவி மக்கள் அதனை நம்பிவிடுவதும், அந்த நம்பிக்கையைச் சாதகமாக்கி ஒரு கூட்டம் பிழைப்பு நடத்துவதும், காலம் காலமாக நடைபெறும் காட்சிகள்!

கலைஞர் எழுதிய 'நாம்' திரைப் படத்தில் ஒரு காட்சி வரும்; வதந்திகள் எப்படி எல்லாம் உருமாற்றம் அடை கின்றன என்பதனை விளக்கிடும் வசனம் ஒன்றினை அதிலே கலைஞர் அமைத்திருப்பார்.

ஒருவன் வந்து மற்றவனிடம், “நம்ப கோவிந்தன் திடீரென வாந்தி எடுத்தான்.. அது எதோ கொஞ்சம் கருப்பு நிறத்தில் இருந்ததாம்”-என்பான்! கேட்டவன் அதே தகவலை மற்ற வனிடம் கூறும்போது, “தெரியுமா சேதி; நம்ப கோவிந்தன் கருப்பாய் காக்கை நிறத்தில் வாந்தி எடுத்தான்” எனக் கூற; “அப்படியா?” என்று அதனைக் கேட்டு விட்டுச்செல்பவன்; இன்னொருவனைச் சந்திக்கும்போது, “தெரியுமா சேதி; நம்ப கோவிந்தன் காக்காய்.. காக்காயாக வாந்தி எடுத்துள்ளான்" - எனக் கூறுவான்!

”விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமே சாவர்க்கர் விழா போல கொண்டாடும் பா.ஜ.க கூட்டம்”: சிலந்தி தாக்கு!

சாதாரண வாந்தி, காக்கையாக ஆனது போல, இன்று ‘புல்புல்' பறவை சிறகிலேறி பயணம் செய்ததாக சாவர்க்கர் நாளடைவில், திருமாலைப் போல ஒரு அவதார புருஷராக்கப் படுவார்.

“புல்புல்' பறவையின் சிறகில் ஏறிப்

பயணிக்க முடியுமா? - எனக் கேட்க முடியாது!

“திருமாலின் வாகனமாக கருடன் அமையவில்லையா? அதேபோல சாவர்க்கர் வாகனமாக ‘புல்புல்' அமையக் கூடாதா? விநாயகரின் வாகனமாக எலி இல்லையா?” என்றெல்லாம் கேட்டு விட்டு, அதேபோல சாவர்க்கரை எதிர் காலத்தில் அவதார புருஷராக மட்டுமல்ல; ஆண்டவனாகக்கூட ஆக்கிடுவர்!

“இதை எல்லாம் செய்ய முடியுமா?” என்று கேட்டு விடாதீர்கள்! அதற்கான முன்முயற்சிகள் தொடங்கப்பட்டுவிட்டன!

'விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துத் தெரிவிக்காதவர்கள் இந்துமதவிரோதிகள் என்று கூறித் திரிந்து வருகிறது, இங்கே ஒரு பா.ஜ.க. கூட்டம்! அந்தக் கூட்டத்தினர் எப்படி எல்லாம் விநாயகர் சதுர்த்தியைக்கொண்டாடிவிநாயகரைப் புறந்தள்ளி, சாவர்க்கரை முன்நிறுத்தி விநாயகர் விழாவில் அரசியலைப் புகுத்தியுள்ளனர் என்பதைப் பாருங்கள்!

விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துவரப்படுவதும், அந்த ஊர்வலத்தின் முன் விநாயகர் பக்தர்களும், மற்றவர்களும் ஆடிப்பாடி வருவதும் இதுவரை நாம் கண்ட காட்சிகள்! இந்த விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டம் பா.ஜ.க. ஆளும் கர்நாடகத்தில் எப்படிக் கொண்டாடப்படுகிறது என்பதைக் கவனியுங்கள்.

ஊர்வலத்தில் விநாயகர் சிலையை எடுத்துவரும் ஊர்தியின் முன்னே சாவர்க்கர் படம் விநாயகர் சதுர்த்தியை நாடெங்கும் பிரபலப்படுத்திய திலகர் படம்கூட அல்ல; சாவர்க்கர் படம் முன்னிலைப்படுத்தப்படுகிறது! இந்தக் கூத்து மட்டுமின்றி, கர்நாடகத்தின் பெல்காவி (வடக்கு) தொகுதி சட்டமன்ற உறுப்பினர், போலீஸ் உத்தரவையும் மீறி விநாயகர் பூஜை நடைபெறும் இடத்துக்குச் சென்று, அங்கே விநாயகர் சிலைமுன் கூடிநின்று, சாவர்க்கர் படத்தை பலருக்கும் விநியோகித்து, விநாயகர் சிலைக்கு முன் எல்லோரும் சாவர்க்கர் படத்தோடு நிற்கும் காணக் கிடைக்காத காட்சிகளும் ஏடுகளில் வெளிவந்துள்ளன.

”விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமே சாவர்க்கர் விழா போல கொண்டாடும் பா.ஜ.க கூட்டம்”: சிலந்தி தாக்கு!

அப்படி சாவர்க்கர் செய்த மக்கள் தொண்டு என்ன? இந்த நாட்டுக்குச் செய்த அரிய காரியங்கள் என்ன?

எதிர்ப்பதும், முடிந்தால் வலிமை கொண்டு எதிரியை வெல்வதும் மதத்தின் கடமை' என்றும், இராவண னைக் கொன்று சீதையை விடுவித்த இராமன் செயலையும், கம்சனைக் கொன்ற கிருஷ்ணன் செயலையும், மகாபாரதத்தில் பீஷ்மரை அர்ஜூனன் கொன்றதையும் சுட்டிக்காட்டி, அதுபோலத்தான் தேசப்பிதா உத்தமர் காந்தியைக் கொன்றதும் - என்று தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்ட கொடுங்கொலைகாரன் கோட்சேவின் போற்றுதலுக்குரிய குருநாதர்தான் அந்த சாவர்க்கர்.

“நான் ஆர்.எஸ்.எஸ்.ஸில் பல ஆண்டு காலம் பணி செய்திருக்கிறேன். பின்னர் இந்து மக சபையில் சேர்ந்து அதனுடைய தொன்மையான இந்துக் கொடியின் கீழ் ஒரு வீரனாகப் போராட என்னை ஆட்படுத்திக் கொண்டேன். இந்தச் சமயத்தில் வீரசாவர்க்கர் இந்து மகாசபையின் தலைமைக்குத் தேர்ந் தெடுக்கப்பட்டார். அவருடைய காந்த ஈர்ப்புத் தன்மையிலும், சூறாவளிப் பிரச்சாரத்திலும் இந்து சங்கத்தார் இயக்கம், முன் எப்போதுமின்றி மிகுந்த ஆற்றலும், உயிர்த் துடிப்பும் பெற்றது! இலட்சக்கணக்கான இந்துக்கள் அவரைக் கதாநாயகனாகவும் இந்த செயல் நோக்கத்துக்கு உண்மையான ஆதரவாளராகவும் பார்த்தனர். நானும் அவர்களில் ஒருவன்.”

- சாவர்க்கரின் ஆத்மார்த்த சீடன் கோட்சே தந்த வாக்கு மூலத்தின் ஒரு பகுதிதான் இது!

காந்தியை சுட்டுக் கொன்ற வழக்கில், சாவர்க்கர் ஒரு குற்றவாளியாகச் சேர்க் கப்பட்டவர், போதுமான ஆதாரங்களை அரசுத் தரப்பு தரவில்லை என்பதால் விடுவிக்கப்பட்டார்!

”விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமே சாவர்க்கர் விழா போல கொண்டாடும் பா.ஜ.க கூட்டம்”: சிலந்தி தாக்கு!

ஆனால், காந்தி படுகொலை வழக்கை விசாரித்த, உயர் போலீஸ் அதிகாரியான ஜாம்ஷெட் தோராப் நகர்வாலா, பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, "சாவர்க்கரின் உதவியும் ஈடுபாடும் இல்லாமல் காந்தியைப் படுகொலை செய்வதற்கான வேலை முழுமையடைந்திருக்காது” என்று கூறியதாக, 'லெட்ஸ் கில் காந்தி - புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதும் இங்கு கவனிக்க வேண்டியது!

- இப்படி பலவித விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ள சாவர்க்கர், இந்திய சுதந்திர தின விழாவில் அரசு விளம்பரங்களில் முன்னெடுக்கப் படுகிறார்! விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமே, "சாவர்க்கர் விழா" போல கொண்டாடப்படுகிறது!

பா.ஜ.க.வின் திட்டங்கள் தொடர்ந்தால், நாளையதினம் விநாயகர் முகம் படிப்படியாக மறைந்து விநாயக் கோட்சேவின் முகம் போலக்கூட வடிவமைக்கப்படலாம்!

இன்று விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டத்தை சாவர்க்கர் விழா போல கொண்டாட முற்படுபவர்கள், நாளை அதனையும் செய்திடத் துணிய மாட்டார்களா?இந்து மதத்தின் பெயரால் நடை பெறும் இத்தகைய அநியாயங்களை உணருங்கள்! மதவெறியைப் புகுத்தி அரசியல் சூதாட்டம் நடத்தும் இந்த நடிப்புச் சுதேசிகளை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்!

banner

Related Stories

Related Stories