India
தூங்கிக்கொண்டிருந்த கணவன் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றிய மனைவி.. தெலுங்கானாவில் அதிர்ச்சி !
தெலுங்கானா மாநிலம் விஜயவாடா பகுதியை சேர்ந்தவர் கிரிதர் - ரேணுபா தம்பதியினர். இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கும் நிலையில், கூலி தொழிலின் மூலம் கிடைக்கும் வருமானம் போதவில்லை. எனவே இவர்கள் குடும்பத்துடன் குடிமல் கபூர் என்ற பகுதிக்கு இடம்பெயர்ந்தனர்.
அங்கே கிரிதருக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த அவரது மனைவி அந்த பெண்ணுடனான தொடர்பை விடும்படி கேட்டுள்ளார். இருப்பினும் அவர்களுக்குள் பழக்கம் தொடர்ந்து நீடித்து வந்ததால் மனைவியின் வற்புறுத்தலின் படி அங்கிருந்து கடந்த 10 நாட்கள் முன்பு தரியா பாக் என் பகுதிக்கு சென்றுள்ளனர்.
வேறு இடத்திற்கு சென்றாலாவது அந்த பெண்ணுடன் இருக்கும் தொடர்பை கணவர் விட்டு விடுவார் என்று நினைத்துள்ளார். ஆனால் கிரிதரோ அந்த பெண்ணுடனான தொடர்பை தொடர்ந்து நீட்டித்து வந்துள்ளார். இதனால் இருவருக்குள்ளும் சண்டை மூண்டது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியே சென்றுவிட்டு வீட்டில் அசதியாக கணவர் கிரிதர் தூங்கிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த பெண்ணை சந்தித்து விட்டு வந்துள்ளதாக எண்ணிய மனைவி ரேணுபா, அடுப்பில் பாத்திரத்தில் கொதித்து கொண்டிருந்த எண்ணையை எடுத்து வந்து தூங்கி கொண்டிருந்த தனது கணவர் மேல் ஊற்றியுள்ளார்.
சூடான எண்ணெய் பட்டதும் அலறி துடித்துள்ளார் கிரிதர். இவரது அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் காவல்துறைக்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மனைவி ரேணுபாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
'ஜனநாயகன்' தயாரிப்பாளருக்கு பதவி... மேகதாது விவகாரத்தில் குரல் கொடுப்பாரா? - திருச்சி சிவா கேள்வி!
-
வைரலாகும் வீடியோ... அமைச்சர் சரத்குமார் மீது போதைப் பொருள் பயன்படுத்தியதாக சந்தேகம்?
-
FIFA உலகக் கோப்பை: தோற்றாலும் போராடுவோம்; அமெரிக்காவை வீழ்த்தி பெருமையுடன் விடைபெற்ற துருக்கி!
-
“மாரத்தான் ஓடுபவர்கள் புலம்பித் தவிக்கின்றனர்... இது கேவலமான செயல்!” : திமுக ஐ.டி விங் கடும் விமர்சனம்!
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!