India
பெண்களின் உள்ளாடைகளை மட்டும் திருடும் வாலிபர்.. காரணம் என்ன?: போலிஸாரிடம் சிக்கவைத்த CCTV:
மத்திய பிரதேச மாநிலம், குவாலியர் பகுதியில் உள்ள வீடுகளில் பெண்களின் உள்ளாடைகள் மட்டும் திருடப்படுவதாக போலிஸாருக்கு புகார்கள் வந்துள்ளது. இதையடுத்து போலிஸார் அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.
அதில், வாலிபர் ஒருவர் வீட்டில் துவைத்துக் காயவைத்துள்ள பெண்களின் உள்ளாடைகளை மட்டும் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதையடுத்து அந்த வாலிபர் உள்ளூரைச் சேர்ந்த ஒருவராக இருக்க வாய்ப்புள்ளதாக போலிஸார் சந்தேகித்துள்ளனர்.
மேலும் ஏன் அந்த நபர் பெண்களின் உள்ளாடைகளை மட்டும் திருடிச் செல்கிறார் என்பது தெரியவில்லை என போலிஸார் தெரிவித்துள்ளனர். சில இடங்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெண்களின் உள்ளாடைகளை மட்டும் திருடும் வாலிபரை போலிஸார் தேடி வருவது மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டின் பக்கம் நிற்காமல், டெல்லிக்குத் துணைபோகிறார் பழனிசாமி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!