India
கர்நாடகா : வெள்ளத்தில் சிக்கிய வீடு.. தவித்த தாய், பச்சிளம் குழந்தை.. ஓட்டை உடைத்து காப்பாற்றிய மக்கள் !
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கி தற்போது வரை பெய்து வருகிறது. குறிப்பாக அம்மாநில தலைநகர் பெங்களுருவில் கடும் கனமழை பெய்து வருகிறது. அண்மைக்காலமாக அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.
மேலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அங்கிருக்கும் அணைகள், ஏரி, குளங்கள் உட்பட நீர் நிலைகள் நிரம்பிவருகின்றன. அதோடு பணிக்கு செல்லவிருக்கும் ஊழியர்கள் படகு உள்ளிட்டவை வரவழைத்து அதில் செல்கின்றனர்.
கனமழை காரணமாக அங்கிருக்கும் ஐ.டி நிறுவனத்துக்கு சுமார் ரூ.225 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக வீடுகளிலும் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இந்த நிலையில், கர்நாடக மாநிலத்திலுள்ள பெலகாவி என்ற பகுதியிலுள்ள கோகாக்கில் நேற்று பெய்த கனமழையால் அங்கிருக்கும் பகுதி வீடுகளில் வெள்ளம் சூழப்பட்டது. மேலும் வீடுகளிலும் தண்ணீர் சென்றுள்ளது.
அப்போது அங்கிருக்கும் ஓடு ஒரு வீட்டில் வெள்ளம் சூழ்ந்து விட்டதால் தாயும், பிறந்து 12 நாட்களேயான குழந்தையும் சிக்கி தவித்தனர். இதனை கண்ட அப்பகுதிவாசிகள் தவித்து வந்த அவர்கள் இருவரையும் வீட்டின் மேல்பகுதியிலுள்ள ஓட்டை பிரித்து பத்திரமாக மீட்டனர். இது தற்போது வைரலாகி வருகிறது.
Also Read
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவண்ணாமலை மக்கள் வசதிக்காக.. விடியல் பேருந்து & AC பேருந்துகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !
-
“தி.மு.கழகத் தொண்டர்களின் உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை!” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!