India
உன்னை எல்லாம் காதலிக்க முடியாது.. மறுத்த சிறுமி மீது ஆசிட் வீசிய தாய்மாமன்: ஆந்திராவில் நடந்த கொடூரம்!
ஆந்திரா மாநிலம், பொட்டி ஸ்ரீராமுலு மாவட்டத்தைச் சேர்ந்த 9ம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரது தாய்மாமா நாகராஜ் என்பவர் வீட்டிற்கு வந்துள்ளார்.
அவர் சிறுமியிடம் தன்னை காதலிக்கும் படி கூறியுள்ளார். இதற்குச் சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் சிறுமியை வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.
அப்போது சிறுமி எதிர்ப்பு தெரிவித்துக் கூச்சலிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் சிறுமியின் முகத்தில் ஆசிட் வீசியுள்ளார். மேலும் அங்கிருந்த கத்தியை எடுத்து சிறுமியின் கழுத்தை அறுத்துள்ளார்.
பின்னர் சிறுமியின் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் வந்து பார்ப்பதற்குள் நாகராஜ் தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து சிறுமி ரத்த வெள்ளத்தில் இருந்தைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவரது பெற்றோருக்குத் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிறுமியை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த நாகராஜை கைது செய்துள்ளனர். காதலுக்கு மறுப்பு தெரிவித்த பள்ளி மாணவி மீது சொந்த தாய் மாமனே ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
’தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ : தமிழ்நாடு முழுவதும் செப்.20,21 தீர்மான ஏற்புக் கூட்டங்கள்!
-
யார் பொறுப்பேற்பது? : விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!
-
முகத்தை மறைத்துக் கொண்டு வெளியேறுவது ஏன்? : பழனிசாமிக்கு தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“இதுக்கெல்லாம் துடிக்காத நெஞ்சம் முகமூடி வீடியோவை வெளியிட்டதால துடிக்குதோ” -அதிமுகவுக்கு குவியும் கண்டனம்
-
61 வயது மூதாட்டியிடம் 3 சவரன் தங்கநகை வழிப்பறி.. தவெக பிரமுகர் கைது.. விசாரணையில் ஷாக்!