India
சொகுசு ஹோட்டலுக்கு சென்ற காதலி.. கொலை செய்துவிட்டு தப்பியோடிய காதலன்.. - கர்நாடகாவில் அதிர்ச்சி !
கர்நாடக மாநிலம் ஹரலஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அபூர்வா ஷெட்டி (வயது 21). அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் இவரும், ஹின்கல் பகுதியைச் சேர்ந்த ஆஷிக் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். அபூர்வாவோ,வீட்டிலிருந்து கல்லூரி தூரம் என்பதால் அருகிலிருக்கும் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி அபூர்வாவும், அவரது காதலர் ஆஷிக்கும் அந்த பகுதியிலுள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர். மேலும் இருவரும் அங்கு சுற்றிப்பார்த்து வந்துள்ளனர். இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஹோட்டலை காலி செய்யாமல் அதிகாலையிலேயே வெளியே சென்றுள்ளார் ஆஷிக். நீண்ட நேரமாகியும் அவரும் திரும்பவில்லை, அறையில் இருந்த அபூர்வாவும் வெளியே வராததால், அவர்களை ஊழியர்கள் தொடர்பு கொள்ள முயன்றனர்.
ஆனால் அதற்கு சரிவர பதில் வராததால் சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த அதிகாரிகள் வேறு சாவியை பயன்படுத்தி கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அபூர்வா வாயில் இரத்தம் வழிய நிர்வாண கோலத்தில் சடலமாக கிடந்துள்ளார்.
இதையடுத்து அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பிய பின் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், அவர்கள் இருவரும் காதலர்கள் என்றும், இவர்கள் காதல் விவகாரம் அபூர்வாவின் குடும்பத்தினருக்கு தெரியவர, அவர்கள் இருவரையும் கண்டித்துள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவான ஆஷிக்கை தேடிய அதிகாரிகள் அவரை கைது செய்தனர். பின்னர் காவல்துறை அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!