India

மகளை விட அதிகம் மதிப்பெண் பெற்றதால் ஆத்திரம்.. மாணவனுக்கு விஷம் கொடுத்த மாணவியின் தாய் !

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நேரு நகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் நியாயவிலைக் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இதில் இரண்டாவது மகன் பால மணிகண்டன் தனியார் பள்ளி ஒன்றில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், பால மணிகண்டன் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்றவர் மதியம் வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் வீடு திரும்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவரின் பெற்றோர் இதுதொடர்பாக கேள்வி எழுப்பியபோது பள்ளியின் காவலாளி கொடுத்த குளிர்பானத்தை குடித்த பின்னரே இப்படி நடப்பதாக கூறியுள்ளார்.

இதன்பின்னர் மாணவரை மருத்துவமனையில் அனுமதித்த பெற்றோர் பள்ளிக்கு சென்று இதுகுறித்து விசாரித்துள்ளனர். அப்போது, பள்ளி சார்பில் குளிர்பானம் கொடுக்கவில்லை என்று கூறியதால் பள்ளி காவலாளியிடம் இதுகுறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது காவலாளி மாணவரின் உறவினர் ஒருவர் கொடுக்கச்சொன்னதாக கூறியுள்ளார். பின்னர் இதுதொடர்பாக அங்குள்ள CCTV காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தியபோது, மாணவன் பயிலும் அதே வகுப்பை சேர்ந்த மாணவியின் பெற்றோர் குளிர்பானத்தை கொடுத்தது தெரியவந்தது.

இதன்பின்னர் மாணவர்க்கு விஷம் கொடுக்கப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டதால் இது குறித்து மாணவரின் பெற்றோர் போலிஸில் புகார் அளித்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் குளிர்பானம் கொடுத்த மாணவியின் தாயாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர் பாலமணிகண்டன் அந்த மாணவியை விட சிறப்பாக படிப்பதால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோரே இந்த மாணவருக்கு விஷம் கொடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: சினிமா வாய்ப்பு தருவதாக ஆபாச படம்.. ஏமாந்த 100-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள்.. சிக்கிய மர்ம கும்பல் !