India
4 காவலாளிகள் கொடூர கொலை.. KGF படத்தை பார்த்து கேங்ஸ்டராக நினைத்த 19 வயது இளைஞன்: ம.பி-யில் பகீர் சம்பவம்!
மத்திய பிரதேச மாநிலம் சாகர் பகுதியில் கடந்த 5 நாட்களில் 4 காவலாளிகள் தூங்கிக் கொண்டிருக்கும் போது கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலைகளை யார் செய்தது என போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் அவர்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் இந்த வழக்கு போலிஸாருக்கு சிக்கலாக இருந்து வந்தது.
இந்நிலையில், அந்த மர்ம கொலையாளி 5 ஆவதாக ஒரு காவலாளியைக் கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் படுகாயம் அடைந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கூறிய கொலையாளியின் அடையாளங்களை வைத்து போலிஸார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், 4 காவலாளிகளை கொலை செய்தது சாகர் பகுதியைச் சேர்ந்த 19 வயது சிவபிரசாத் துருவ் என்ற இளைஞர்தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து விசாரணை செய்தபோது திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.
KGF படத்தில் வரும் ராக்கி பாய் கதாபாத்திரம் போன்று பெரிய கேங்ஸ்டாராக நினைத்து இந்த கொலைகளைச் செய்ததாக போலிஸாரிடம் சிவபிரசாத் துருவ் வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும் தனியாகத் தூங்கிக் கொண்டிருக்கும் காவலாளிகளை குறிவைத்து கொலை செய்து வந்ததையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதையடுத்து போலிஸார் மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 5 நாட்களில் 4 காவலாளிகள் தூங்கிக் கொண்டிருக்கும் போது கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Also Read
-
“த.வெ.க பொறுக்கிகளால் பெண் போலீசாருக்கே பாதுகாப்பில்லை” : தி.மு.க IT Wing கண்டனம்!
-
அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சபாநாயகரிடம் தி.மு.க கடிதம்!
-
“தி.மு.க முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுகிறது!” : கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!
-
“பேரறிஞர் அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார்! வாழ்க அண்ணாவின் புகழ்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுங்கள்! - முரசொலி தலையங்கம்!