India
"அப்பளத்துக்கா இத்தனை அக்கப்போர் ?" - கலவரகளமான திருமண நிகழ்ச்சி.. விரோதிகளாக மோதிக்கொண்ட இருவீட்டார் !
கேரள மாநிலம் ஆலப்புழா அருகில் உள்ள ஹரிப்பாடு முட்டம் பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் திருக்குன்றபுலா பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் இரண்டு தரப்பையும் சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
திருமணம் முடிந்தபின்னர் திருமண விருந்து நடைபெற்றுள்ளது. அப்போது மணமகனின் உறவினர்கள் பந்தியில் சாப்பிட அமர்ந்துள்ளனர். அவர்கள் கூடுதலாக ஒரு அப்பளம் கேட்டுள்ளனர். ஆனால் அப்பளம் வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் மணப்பெண் வீட்டை சேர்ந்தவர்களிடம் அப்பளம் வைக்கவேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த விவகாரம் வாக்குவாதமாக மாறியுள்ளார். மணமகன் தரப்பினரும் மணமகள் தரப்பினரும் அங்கு கூடி இது தொடர்பாக மாறி மாறி வாங்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இரு தரப்பும் மாறி மாறி தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் மேஜை, நாற்காலிகளை அடித்து உடைக்க்கப்பட்டுள்ளது. மேலும் இதனை தட்டிக்கேட்ட திருமண மண்டப உரிமையாளரையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.
பின்னர் இது தொடர்பாக தகவல் அறிந்த போலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து இரு தரப்பினரையும் அங்கிருந்து விரட்டி அடித்தனர். மேலும் இந்த வன்முறையில் 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட தற்போது இது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!