India
திறக்க முடியாத ஆம்புலன்ஸ் கதவு..கோடாரியால் உடைத்து திறந்த பொதுமக்கள் ..உள்ளே இருந்தவருக்கு நடந்த சோகம்!
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் கோயமோன் (வயது 66 ). இவர் அங்குள்ள உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் வேகமாக வந்த இருசக்கர வாகனம் இவர் மீது மோதியுள்ளது.
இதில் படுகாயமடைந்த அவரை அங்குள்ளவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனால் ஆம்புலன்சில் அவர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். அங்கு சென்றதும் அவரை அழைத்துவந்த ஆம்புலன்சில் கதவுகள் திறக்க முடியாத அளவு சிக்கிக்கொண்டுள்ளது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உட்பட அங்கிருந்த பொது மக்கள் ஆம்புலன்சில் கதவை திறக்க பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளனர்.
பின்னர் 30 நிமிடம் போராடி அங்கிருந்த கோடாரியின் உதவிகொண்டு அந்த ஆம்புலன்ஸ் கதவு உடைக்கப்பட்டுள்ளது. பின்னர் அதன்பின் இருந்த கோயமோன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த தகவல் வெளிவரவே அரசு மருத்துவ மனையில் உள்ள வாகனங்களை ஆய்வு செய்து முறையான பராமரிப்பில் வைக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!