India
ஒருவர் MISSING..நொய்டா இரட்டை கோபுர இடிப்பின்போது பரபரப்பான அதிகாரிகள்.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி!
நொய்டா என்ற தொழில் நகரத்தை கட்டமைக்கும் திட்டத்தின் ஒருபகுதியாக, மக்கள் வசிக்கும் குடியிருப்பு ஒன்றைக் கட்ட, 2004ஆம் ஆண்டு சூப்பர்டெக் என்ற நிறுவனத்துக்கு நொய்டா நகர நிர்வாகம் ஒரு இடத்தை வழங்கியது.
கடந்த 2005ஆம் ஆண்டு,10 தளங்கள் கொண்ட 14 அடுக்குமாடிக் கட்டடங்களை கட்ட அனுமதி வழங்கப்பட்டது. அதேசமயம், 37மீட்டருக்கு மேல் உயரம் கூடாது என்று தடையும் விதிக்கப்பட்டது. பின்னர் கடந்த 2009ஆம் ஆண்டு, 40 தளங்களுடன் கூடிய இரண்டு அடுக்குமாடி கோபுரங்கள் கட்ட இறுதித் திட்டம் தீட்டப்பட்டது. ஆனால், இந்த திட்டத்துக்கு அப்போது ஒப்புதல் அளிக்கப்படவில்லை.
அதைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு தங்கள் கட்டடங்களிலிருந்து வெறும் 16மீட்டர் தொலைவு மட்டுமே உள்ள இந்த இரு கோபுரங்களால் சட்டவிதிகள் மீறப்பட்டுள்ளன என குடியிருப்பு வாசிகள் சார்பில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள இந்த கட்டடம் இடிக்கப்படவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழங்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றம் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.
அதைத் தொடர்ந்து கட்டடத்தை இடிக்கும் பணிகள் நடைபெற்றன. மூன்று நாடுகளைச் சேர்ந்த பொறியாளர்கள் குழுவினர், 20,000 இணைப்புகளின் வழியே 40 மாடிகளிலும் வெடிப்பொருட்களை வைத்தனர். அதன்பின்னர் ஏறக்குறைய 3,700 கிலோ வெடிமருந்துகளை வைத்து இந்த கட்டடம் வெறும் 9 வினாடிகளில் தரைமட்டமாக்கப்பட்டது.
முன்னதாக இந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு, அந்த பகுதியில் இருந்த மிருகங்கள் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டனர். மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளே நுழைய யாரும் அனுமதிக்கப்படவில்லை.
அப்போது அந்த பகுதியில் இருந்த மக்கள் குறித்து குறிப்பெடுத்த அதிகாரிகள் அதில் ஒருவர் மட்டும் வெளியேறாமல் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் அவரை தேடிய போது அவர் தனது அபார்ட்மெண்ட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அவரை எழுப்பி உடனடியாக அவரை வெளியேற்றினர். பின்னர் இது தொடர்பாக கூறிய அதிகாரிகள், குறிப்பிட்ட நேரத்துக்குள் பொதுமக்கள் அனைவரும் அந்த பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறியிருந்தோம். ஆனால் நாங்கள் சொன்ன நேரத்தை அவர் மறந்துவிட்டு வீட்டில் படித்து தூங்கிவிட்டார் என்று கூறியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்” - 80வது முறை கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!
-
கொருக்குப்பேட்டை மேம்பாலம் திறப்பு... எண்ணூர் மேம்பாலத்துக்கு அடிக்கல்.. ஒரே நேரத்தில் அசத்திய முதல்வர்!
-
எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி கல்வெட்டுகள் : உலகம் தழுவிய தமிழ் - அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல் வேலைவாய்ப்பு வரை... முதலீடுகள் செயலாக்க மாநாட்டில் நிகழ்ந்தது என்ன?
-
ரூ.62.5 கோடியில் UPSC தேர்வுப் பயிற்சி மையக் கட்டடம், செயலி... அறிமுகப்படுத்துகிறார் முதலமைச்சர்!