India
4 வயது குழந்தையின் காலை தீவைத்து எரித்த கொடூரம்.. தாய் மற்றும் அவரின் காதலர் அதிரடி கைது !
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒசத்தியூரைச் சேர்ந்தவர ரெஞ்சிதா, இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர் கணவரை விட்டு பிரிந்து , கூலிக்கடவு மார்க்கெட் ரோட்டில் தனது காதலர் உன்னிகிருஷ்ணனுடன் வாடகைக்கு வசித்து வருகிறார். இவரது 4 வயது குழந்தையும் இவ்ர்களோடு ஒன்றாக இருந்துள்ளது.
இந்த நிலையில் இவரின் குழந்தை அங்கன்வாடிமையத்துக்கு செல்லாமல் விளையாடுவதில் ஆர்வம் காட்டியதால் ஆத்திரம் அடைந்த தாய் ரஞ்சிதா குழந்தையை அடித்துள்ளார். அதன் பின்னும் ஆத்திரம் அடங்காத அவர், குழந்தையின் காலை அடுப்பில் வைத்துள்ளார். மேலும் அவரை மின்சார வயரைப் பயன்படுத்தியும் அடித்துளார்.
இதில் குழந்தையின் கால் கடுமையாக சேதமடைந்த நிலையில், பழங்குடியினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் தாக்குதலின் தீவிரத்தால் அவரது கால் பகுதியின் சதை உதிர்ந்து விட்டது என்று கூறியுள்ளனர்.
இந்த தகவலை அறிந்த அந்த பெண்ணின் கணவர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிவு செய்த போலிஸார் தாய் ரெஞ்சிதாவையும் அவரின் காதலர் உன்னிகிருஷ்ணனையும் கைது செய்தனர்.
பின்னர் குழந்தையிடம் போலிஸார் பேசியபோது உன்னிகிருஷ்ணன் தன்னை அடிக்கடி தாக்கியதாக அது கூறியுள்ளது. இந்த சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
தினமலரின் பொய் செய்தி! - அங்கன்வாடி மையங்கள் குறித்து விளக்கிய தமிழ்நாடு அரசு!