India
மாயமான ஆம் ஆத்மி கட்சி MLAக்கள் ?.. டெல்லி அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு: வெளியாகும் பா.ஜ.க-வின் அம்பலம்!
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவாலும், துணை முதல்வராக மணிஷ் சிசோடியாவும் இருந்து வருகின்றனர். ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது.
சமீபத்தில் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த வழக்கு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து டெல்லி அரசின் மதுபான கொள்கையில் ஊழல் முறைகேடு என குற்றம்சாட்டி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதன் பின்னர் அவருக்குச் சொந்தமான 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.மேலும் மணீஷ் சிசோடியா வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு வருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா , "ஆம் ஆத்மியை இரண்டாகப் பிளவுபடுத்தி பாஜகவில் இணைய வேண்டும், அப்படிச் செய்தால் அனைத்து வழக்குகளையும் முடித்து விடுகிறோம் என மிரட்டியதாகத் தெரிவித்துள்ளார். இது டெல்லி அரசியலில் பெரிய புயலை கிளப்பியுள்ளது. மேலும் டெல்லியில் ஆம்.ஆத்மி ஆட்சியைக் கவிழ்க்க அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதை உறுதி செய்யும் விதமாக, ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங், "கட்சியிலிருந்து விலகி பா.ஜ.கவில் சேர்ந்தால் ரூ.20 கோடி தருவதாகப் பேரம் பேசியதாக" தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா, கர்நாடகா ஆட்சியை கவிழ்த்ததுபோல் டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க சதிசெய்து வருவது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் இன்று ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொண்டபோது சிலரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்ற தகவல் கட்சி வட்டாரங்களில் இருந்து வெளியாகியுள்ளது. இதனால் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் சிலர் மாயமாகியுள்ளது தெரியவந்துள்ளது. பா.ஜ.க பேரம் பேசுவதாகப் புகார் எழுந்த வரும் நிலையில் ஆம். ஆத்மி எம்.எல்.ஏக்கள் சிலர் மாயமாகியுள்ளது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!
-
”ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சுதாகர் ரெட்டி” : முதலமைச்சர் இரங்கல்!
-
2035-ம் ஆண்டு விண்வெளி ஆய்வு மையம், 2040-ல் நிலவில் தரையிறங்கும் திட்டம் - இஸ்ரோ தலைவர் பேச்சு !