India

இனி Gpay, Phonepe போன்ற சேவைகளுக்கும் கட்டணம்? .. RBI முடிவால் பொதுமக்கள் அதிர்ச்சி!

உலகம் முழுவதும் ஸ்மார்ட் போன்கள் பயன்பாடு அதிகமானதை அடுத்து டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சாதாரண மளிகைக் கடைமுதல் வங்கிகள் வரை என அனைத்தும் Gpay, Phonepe போன்ற செயலிகள் மூலம் பணத்தைச் செலுத்தி வருகின்றனர்.

இப்படிப் பணம் செலுத்துவதற்கு இதுவரை கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாமல் உள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை முறையில் கலந்து விட்டன Gpay, Phonepe போன்ற சேவைகள்.

இந்நிலையில் Gpay, Phonepe பணப் பரிவர்த்தனை செயலிகளுக்குக் கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகளைப் பங்குதாரர்களிடம் ஆலோசனையும் கேட்டுள்ளது.

இதையடுத்து ATMல் நமது சேமிப்பு பணத்தை எடுத்தால் அதற்குக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதைப் போன்று Gpay, Phonepe போன்ற செயலிகளைப் பயன்படுத்தி பணம் அனுப்புவதற்கும் கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: விரைவுச் சாலை அமைப்பதற்காக 500 அடி வீட்டை தள்ளி வைத்த நபர்.. ஆசையாக கட்டிய கனவு வீட்டிற்கு வந்த சோதனை!