India
பள்ளி சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை.. தந்தையின் நண்பர்களே செய்த அவலம் ! - கேரளாவில் கொடூரம் !
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த 12-வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனது வகுப்பறையில் சோகமாக அமர்ந்திருத்திக்கிறார். அப்போது அவரிடம் ஆசிரியை விசாரித்த போது அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து அவரை மருத்துவரிடம் அழைத்து சென்ற போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்தார்.
இதை கேட்டு அதிர்ந்த ஆசிரியை மாணவியை குறித்து குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு வந்த அவர்கள் மாணவியிடம் பொறுமையாக விசாரித்தனர். அப்போது மாணவி அளித்த தகவலை கேட்டு அனைவரும் அதிர்ந்தனர்.
அதாவது அந்த மாணவியின் தந்தை அந்த பகுதியில் கஞ்சா விற்றுவந்துள்ளார். இதனால் அவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். எனவே தனது கணவரை சிறையிலிருந்து மீட்பதற்காக சிறுமியின் தாயார் அழைந்து திரிந்துள்ளார். அப்போது தந்தையின் நண்பர்களான 3 பேரை வீட்டில் தனியாக இருந்த மாணவியை பார்த்துக்கொள்ளுமாறு கூறியிருக்கிறார் மாணவியின் தாயார்.
இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த தந்தையின் நண்பர்கள் கஞ்சா போதையில் மாணவியை மிரட்டி வலுக்கட்டயமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதோடு இது குறித்து வெளியே சொன்னால் மாணவியும், தாயையும் கொன்று விடுவதாகவும் பயமுறுத்தி மிரட்டியுள்ளனர்.
இதனால் பயந்து போன மாணவி நீண்ட நாட்களாக வெளியே சொல்லவில்லை. ஆனால் மறுபடியும் அவர்கள் தொந்தரவு செய்ததால் தனது தாயாரிடம் கூறியிருக்கிறார். ஆனால் தாயோ இது குறித்து காவல்துறையில் புகாரும் அளிக்காமல் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.
இதனால் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளான மாணவிக்கு உடல்நிலை மோசமானதாக தெரியவந்தது. இதையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றாவளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில் அதில் 1 நபரை கைது செய்தனர். தற்போது தலைமறைவாக இருக்கும் மற்ற இருவரையும் தீவிரமாக தேடிவருகின்றனர்.
அதோடு இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்காத சிறுமியின் பெற்றோர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவியை தந்தையின் நண்பர்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை - காரணம் என்ன ?
-
தமிழ்நாட்டுக்கு பாராமுகம் காட்டினால்,தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்- தினகரன் தலையங்கம் எச்சரிக்கை!
-
முதலில் எய்ம்ஸ் அல்வா, இப்போது மெட்ரோ அல்வா: இது பாஜக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் அநீதி- முரசொலி விமர்சனம்!
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!