India
சாலையில் சிறுநீர் கழித்த இளைஞர்.. தட்டிக்கேட்ட இளம்பெண்.. கொலையில் முடிந்த சோகம் !
தெற்கு டெல்லியிலுள்ள ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் படித்து வரும் இளைஞர் மயன்க் பன்வார் (வயது 25). இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பேகம்பூர் பகுதியிலுள்ள டிடிஏ மார்க்கெட்டில் ஒரு இடத்தில் சிறுநீர் கழித்தார்.
இதைப்பார்த்த ஒரு பெண் அதனை தட்டிக்கேட்டபோது, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அந்த பெண்ணுக்கு ஆதரவாக மனிஷ் (வயது 19) என்பவர் வந்தார். அவருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மயன்க், அடித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தன்னை தாக்கியதால் ஆதரியமடைந்த மனிஷ், தனது நண்பர்களை தொடர்பு கொண்டு வரவழைத்துள்ளார். இதையடுத்து அவர்கள் அனைவரும் சேர்ந்து மயன்கை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனிடையே மயன்க் உடன் இருந்த விகாஸ் என்ற நண்பர் சண்டை பெரிதாகும் என்று எண்ணியதால் அந்த இடத்தை விட்டு தப்பியோடிவிட்டார்.
பின்னர் இந்த தாக்குதலில் மனிஷ் தரப்பினர், மயன்கை கத்தியால் குத்திவிட்டு அந்த இடத்தை விட்டு தப்பியோடினர். இதையடுத்து காயமடைந்து கிடந்த மனிஷை பொதுமக்கள் மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும்வழியிலேயே மயன்க் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அப்போது சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சியை வைத்து, தனது உறவினர் வீட்டில் இருந்த மனிஷையும், மற்றும் அவரது நண்பர்களான சுராஜ் (வயது 19), ஆஷிஷ் (வயது 20), ராகுல் (வயது 19) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!