India
IAS அதிகாரியிடம் 7,189 ஆபாச படங்கள்.. சிறுமிகளை வன்கொடுமை செய்த வழக்கில் 7 ஆண்டுக்கு பிறகு தண்டனை !
கடந்த 2015-ம் ஆண்டு 8 முதல் 13 வயதுக்குட்பட்ட நான்கு சிறுமிகளை இனிப்புகள் கொடுத்து தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர்களிடம் தவறாக நடந்ததாக வெளிவந்த குற்றச்சாட்டின் கீழ் மகாராஷ்டிராவை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி மாருதி ஹரி சாவந்த் கைது செய்யபட்டார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக எழுந்த நிலையில், மஹாராஷ்டிரா வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சிலில் பொது இயக்குநராக பணியாற்றிய அவர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து அந்த சிறுமிகளின் மருத்துவ அறிக்கையில் அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றசாட்டு நிரூபிக்கப்பட்டார். ஆனால், நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் மாருதி ஹரி சாவந்த் மீதான குற்றச்சாட்டு பற்றி ஏதும் கூறாததால் போக்ஸோ சட்டத்தின் வில் தண்டனை தரமுடியாது என்று நீதிமன்றம் மறுத்தது.
இந்த நிலையில், இந்த வழக்கை கைவிடாத போலிஸ் அதிகாரிகள் மாருதி ஹரி சாவந்த்தின் வீட்டில் சோதனை நடத்தியபோது அதில் ஒரு ஹார்ட் டிஸ்கை கைப்பற்றினர். பின்னர் அதை சோதனை செய்தபோது அதில், 7,189 ஆபாச படங்கள் மற்றும் 443 குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது.
இதைத் தொடர்ந்து மேலதிக ஆதாரங்களை போலிஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில், தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டத்தின் கீழ் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. சாவந்திற்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 7 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிக்கு 7 ஆண்டுகளுக்கு பின்னர் தண்டனை பெற்றுத்தரப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!