India
தந்தை இறந்து 2 வாரத்திலேயே மகன் சாலை விபத்தில் பலி: சோகத்தில் மூழ்கிய கிராமம்!
புதுச்சேரி வில்லியனூர் மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் தருண் ( 20). இவர் மதகடிப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 2 ம் ஆண்டு செவிலியர் படிப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் இன்று தருண் வழக்கம்போல் தனது இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். வடமங்கலம் அருகே அவர் சென்றபோது, எதிரே முதியவர் ஒருவர் சைக்கிளில் வந்துள்ளார். அவர் மீது மோதாமல் இருக்க தருண் தனது வாகனத்தை வலது புறமாகத் திருப்பியுள்ளார்.
அப்போது எதிரில் வந்த இரண்டு இருசக்கர வாகனம் மீது தருணின் இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில் தருண் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் தகவல் அறிந்து அங்கு வந்து தருண் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்புதான் விபத்தில் உயிரிழந்த தருணின் தந்தை உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை இறந்து இரண்டு வாரத்தில் மகன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
5 கி.மீ தூரம் நடைபயணம் : தமிழ் வெல்லும்' - கலைஞர் சிலையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !