India
மோடி-யோகி இடையே உரசல்?: 2 நாட்கள் Free பேருந்து அறிவித்த யோகி..இலவசம் வளர்ச்சிக்கு எதிரானது என பேசிய மோடி
உத்தர பிரதேச மாநிலம், புந்தேல் கண்ட் பகுதியில் ரூ.14,850 கோடியில் அமைக்கப்பட்டுள்ள விரைவு சாலையை அண்மையில் பிரதமர் மோடி திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும் போது இலவத் திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது என தெரிவித்திருந்தார்.
மேலும், "இலவசத் திட்டங்களை அறிவித்து மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்க முடியும் என சிலர் கருதுகின்றனர். இந்த மோசமான கலாச்சாரத்தை மக்கள் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும். இந்திய அரசியல் இருந்து இலவசத் திட்டக் கலாச்சாரம் வேரறுக்க வேண்டும்" எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிகழ்வுகள் முடிந்த அடுத்த சில நாட்களிலேயே உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்தியநாத், ரக்ஷா பந்தனை ஒட்டி 2 நாட்கள் அரசுப் பேருந்தில் பெண்களுக்கு இலவசப் பயணம், 60 வயது மேற்பட்ட பெண்களுக்கு இலவச பயணத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்.
இதையடுத்து பிரதமர் மோடி இலவசத் திட்டங்களை எதிர்த்துப் பேசிய நிலையில், யோகி ஆதித்தியநாத் இலவசத் திட்டம் அறிவித்திருப்பது பா.ஜ.க கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மோடிக்கும், யோகிக்கும் இடையே உரைசல் ஏற்பட்டுள்ளதாக இதன் மூலம் தெரிகிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல் ட்விட்டரில் #YogiOpposesModi என்ற ஹஷ்டாக் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
-
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
அ.தி.மு.கவில் இருந்து விலகிய பால் மனோஜ் பாண்டியன் : முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்!