India

எச்சரிக்கையை மீறி சாகசம்.. வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட கார்.. 3 இளைஞர்கள் பலி ! நடந்தது என்ன?

ஆந்திரா மாநிலம் கர்னூலை சேர்ந்த நான்கு கல்லூரி மாணவர்கள் கார் ஒன்றில் அங்குள்ள கோவிலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் பயணித்த கார்நந்தியாலா மாவட்டத்திலுள்ள ராயப்பாடு அருகே சென்றுகொண்டிருந்தது.

அப்போது ஜக்துர் என்ற பகுதியில் இவர்கள் சென்ற சாலையில் காட்டாற்றின் மேல் பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் காட்டாற்றில் வெள்ளம் அதிகம் வந்துள்ளது. இதனால் பாலத்தில் செல்ல வேண்டாம் என அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் அந்த எச்சரிக்கையை மீறி அந்த இளைஞர்கள் காரில் அந்த காட்டாற்றை தாண்டியுள்ளனர். வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டது.

இதனை கவனித்த அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் குதித்து அவர்களை மீட்க முயன்றனர்.காரின் கண்ணாடியை உடைத்து 3 பேர் உயிரோடு மீட்கப்பட்ட நிலையில், ஒருவர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார்.

இதைத் தொடர்ந்து தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த போலிஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர் காரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வாட்ஸ்அப்பில் கிண்டல் செய்ததால் ஆத்திரம்.. இளைஞரை கொடூரமான தாக்கிய நபர் கைது.. கேரளாவில் பரபரப்பு !