India
E-Rickshaw-வுக்கு சார்ஜ் செய்தபோது நடந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு!
உலகம் முழுவதும் மின்சார வாகனத்தின் மீதான ஆர்வம் மக்களுக்கு அதிகரித்துள்ளது. இதற்கு எரிபொருளின் விலையும் காரணமாக அமைந்துள்ளது.
இந்தியாவில், OLA உள்ளிட்ட நிறுவனங்கள் மின்சார ஸ்கூட்டர்களை விநியோகம் செய்து வருகின்றன. அதேபோல இந்தியாவில் மின்சார கார்களும் விற்பனையாகிறது. இந்த வாகனங்களை வாடிக்கையாளர்கள் பலரும் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், அடிக்கடி மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் கார்கள் தீ பிடித்து விபத்துகளை சந்தித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. இப்படியான விபத்தில் உயிரிழப்பு சம்பவங்களும் நடந்துள்ளது.
இந்நிலையில் e-rickshaw-வுக்கு சார்ஜ் செய்யும் போது மெக்கானிக் ஒருவர் உயிரிழந்த சம்பவம் டெல்லியில் நடித்துள்ளது. டெல்லி நிஹால் விகார் பகுயைச் சேர்ந்தவர் தர்மேந்தர். மெக்கானிக்கான இவர் e-rickshaw-வுக்கு சார்ஜ் செய்துள்ளார். அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதையடுத்து அவரை மீட்டு உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நிஹால் விகார் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். e-rickshaw-வுக்கு சார்ஜ் செய்யும் போது மெக்கானிக் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!