India
பெண்ணை ஆபாசமாக மிரட்டிய பாஜக நிர்வாகி.. தரைமட்டமான வீடு.. - உ.பி-யில் நடந்தது என்ன ?
உத்தர பிரதேச மாநிலம், நொய்டா பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒன்றில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்த் தியாகி. இவர் பா.ஜ.க-வின் கிசான் மோர்ச்சா சங்கத்தின் உறுப்பினராகவும், யுவ சமிதியின் தேசிய இணை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.
இந்த நிலையில், ஸ்ரீகாந்த் தியாகி, தனது குடியிருப்பில் உள்ள ஒரு இடத்தை ஆக்கிரமித்து அங்கு செடிகளை வைத்துள்ளார். இதைப்பார்த்த அதே குடியிருப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் இது விதிமீறலாக இருப்பதாக அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் இருவருக்குமிடையே மோதலாக வெடித்தது.
மேலும் ஸ்ரீகாந்த் தியாகி அந்த பெண்ணை பற்றி ஆபாசமாக திட்டி மிரட்டியுள்ளார். அதோடு அந்த பெண்ணை இவர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. ஸ்ரீகாந்த் தியாகி அந்த பெண்ணை மிரட்டும் வீடியோ அண்மையில் இணையத்தில் வைரலானது. இதையடுத்து இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம், ஸ்ரீகாந்த் தியாகியைக் கைதுசெய்யக்கோரி கண்டனம் தெரிவித்தது.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், இது குறித்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது பா.ஜ.க, பிரமுகரான ஸ்ரீகாந்த் தியாகிக்கு நொய்டாவில் இருக்கும் சொந்தமான சட்டவிரோத கட்டடங்களை உத்தரபிரதேச காவல்துறையினர் புல்டோசர் கொண்டு இடித்துள்ளது.
அதோடு, ஸ்ரீகாந்த் தியாகியின் ஆதரவாளர்களையும் கைதுசெய்த காவல்துறையினர், அவர்கள் மீது வழக்கு பதிவும் செய்துள்ளது. இதனிடையே ஸ்ரீகாந்த் தியாகி தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது ஸ்ரீகாந்த் தியாகி கட்டடம் புல்டோசரால் இடித்துத் தள்ளப்படும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
மேகதாது அணை.. கர்நாடக செல்லும் முதல்வர் விஜய்.. வீடியோ போடலாம், விடியலைத் தராது: எச்சரிக்கும் முரசொலி!
-
“முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை!”: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!