India
சரக்கு ரயில் இன்ஜினில் சிக்கிய இளைஞர்.. 5 கி.மீ தரதரவென இழுத்து சென்ற அவலம் ! - அடுத்து நடந்தது என்ன ?
உத்தர பிரதேச மாநிலம் துமாய் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அஜீத் குமார் லோதி (வயது 18). இவர் நேற்று டெல்லி-ஹவுரா இரயில் பாதையில் வந்து கொண்டிருந்த சரக்கு இரயில் ஒன்றின் இன்ஜினில் சிக்கியுள்ளார். சிக்கிய இவரை, அந்த இரயில் சுமார் 5 கிலோ மீட்டர் வரை இழுத்து சென்றுள்ளது.
இதையடுத்து இளைஞர் சிக்கியதை அறிந்த இரயில் ஓட்டுநர் வண்டியை உடனடியாக நிறுத்தியுள்ளார். பின்னர் இறங்கி வந்து பார்க்கையில் இளைஞரின் உடல் சிதைந்த நிலையில் இருந்தது. இதைக்கண்டு அதிச்சியடைந்த ஓட்டுநர் உடனடியாக இரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், அந்த இளைஞரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், அந்த இளைஞர் தவறுதலாக இன்ஜினில் சிக்கினாரா ? அல்லது தற்கொலை செய்துள்ளாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !