India
நிதி ஆயோக் கூட்டத்தால் ஒன்றும் பலனில்லை.. மோடி தலைமையிலான கூட்டத்தைப் புறக்கணித்த தெலங்கானா முதல்வர்!
பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் நிர்வாகக் குழு 7வது கூட்டம் டெல்லியில் தொடங்கியுள்ளது. இதில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பிற மாநில முதல்வர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த 2019ம் ஆண்டு ஜூலைக்குப் பிறகு நிதி ஆயோக் கூட்டம் நேரடியாக நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக 2020ம் ஆண்டு கூட்டம் நடைபெறவில்லை. கடந்த ஆண்டு காணொலி வாயிலாகக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் இம்முறை நேரடியாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் நிர்வாகக் குழு 7வது கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தேசியக் கல்விக் கொள்ளை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இந்த கூட்டத்தைப் புறக்கணிப்பதாக தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் ஏற்கனவே பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், "மாநிலங்கள் வளர்ச்சியடைந்தால் மட்டுமே ஒட்டுமொத்த இந்தியாவும் வளர்ச்சி காணும். நிதி ஆயோகின் நிர்வாக கவுன்சில் கூட்டத்தால் எந்தப் பலனும் இல்லை.
மாநிலங்களைப் பாகுபடுத்தும் வகையிலேயே ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. எனவே நிதி ஆயோகின் கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவது இல்லை' என தெரிவித்துள்ளார்.
சில மாதங்களாகவே தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும் பிரதமர் மோடி எப்போது தெலங்கானா வந்தாலும் அவரை வரவேற்கச் செல்லாமல் பிரதமரின் சந்திப்பைத் தவிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !