India
கல்லூரி சமையல் அறையில் சோப்பு தேய்த்து குளித்துக்கொண்டிருந்த வடமாநில தொழிலாளி: அதிர்ச்சியடைந்த மாணவர்கள்!
தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் ஐஐஐடி - பாசார் என்று அழைக்கப்படும் ராஜீவ் காந்தி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழக வளாகத்தில் மூன்று மெஸ்கல் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த மெஸ்களில் உள்ள சமையல் அறை ஒன்றில் தொழிலாளர்கள் சிலர் குளித்துள்ளனர். இதைப்பார்த்த பல்கலைக்கழக மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்னர் உடனே இதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 3ம் தேதி உணவு சாப்பிட்ட 100 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றனர். மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே தரமாண உணவு வழங்கப்படவில்லை என மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில்தான் சமையல் அறையில் தொழிலாளர்கள் குளிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் உரிய நடவடிககை எடுக்க வேண்டும் எனவும் தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!