India
காட்டுப்பகுதியில் 18 வயது இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: உ.பி-யில் தொடரும் கொடூரம்!
உத்தர பிரதேச மாநிலம், பாலியா மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் இயற்கை உபாதைக்காகத் தனது கிராமத்திற்கு வெளியே உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது, அதேகிராமத்தைச் சேர்ந்த 4 வாலிபர்கள் அந்த பெண்ணை கூட்டாகச் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் சென்றுள்ளனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் நடந்தவை குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் வன்கொடுமை செய்த 4 பேரையும் அடையாளம் கண்டு, தலைமறைவாக உள்ள அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அக்கிராமத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமையில் பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேச மாநிலம்தான் முதலிடத்தில் உள்ளது. மேலும் போக்சோ வழக்குகள் அதிகம் பதிவு செய்யப்பட்ட மாநிலங்களிலும் உத்தர பிரதேசம் தான் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
இம்மானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
மனசாட்சியற்ற – சந்தர்ப்பவாத – கல்லாப்பெட்டி கூட்டணி : விஜய்யின் முகத்திரையைக் கிழித்த முரசொலி!
-
போராளிக்கான தழும்பு...! விஜய்யின் 'மிசா' குறித்த விமர்சனத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி
-
நடிக்காதே நயவஞ்சகா...! விஜய் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் : முரசொலி ஆவேசம்!
-
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் - தி.மு.க. சார்பில் களம் இறங்கும் சேது : மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!