India
15 வயது சிறுவனுடன் வீட்டை விட்டு வெளியேறிய திருமணமான இளம்பெண்.. போக்ஸோவில் கைது - ஆந்திராவில் அதிர்ச்சி !
ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா பகுதியை அடுத்துள்ள குடிவாடா பகுதியை சேர்ந்தவர் ஸ்வப்னா. 30 வயதுடைய இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக இவர் இவரது கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார்.
இந்த நிலையில், இவர் வீட்டுக்கு எதிர் வீட்டில் இருக்கும் குடும்பத்தில் உள்ள 8 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன், ஸ்வப்னா வீட்டிற்கு வந்து டி.வி., பார்ப்பது வழக்கம். தனது ஸ்வப்னா அந்த 15 வயது சிறுவனுக்கு ஆபாச வீடியோக்களை போட்டுக்காட்டியுள்ளார். மேலும் இருவரும் நெருக்கமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி பல நாட்களாக இருந்து வந்த நிலையில், திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவனிடம் தனது கணவர் தனது வீட்டிற்கு மீண்டும் வருவதாக கூறிய ஸ்வப்னா, நாம் எங்கேயாவது சென்று விடலாம் என்று கூறியுள்ளார். இதற்கு சிறுவன் முதலில் தயங்க, தான் அவரை பத்திரமாக பார்த்துக்கொள்வதாக மூளைச்சலவை செய்துள்ளார். எனவே சிறுவனும் ஒப்புக்கொண்டுள்ளார். அதன்படி கடந்த 19-ம் தேதி இருவரும் வீட்டை விட்டு சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் ஏதும் அறியாத சிறுவனின் பெற்றோர்கள், சிறுவனை காணவில்லை காவல்துறையில் புகைரளித்தனர். இதையடுத்து சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், எதிர்வீட்டில் இருந்த ஸ்வப்னாவையும் காணவில்லை என்பதை கேட்டவுடன் சேந்தேகித்தனர். இதையடுத்து ஸ்வப்னாவின் செல்போன் எண்ணை வைத்து காவல்துறையினர் தேடியபோது, ஸ்வப்னா ஐதராபாத்தில் ஒரு லாட்ஜில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஐதராபாத் விரைந்த காவல் அதிகாரிகள், ஸ்வப்னா தங்கியிருந்த லாட்ஜூக்கு சென்றபோது அங்கு அந்த சிறுவனும் இருந்துள்ளார். பின்னர் இருவரையும் குடிவாடா பகுதிக்கு அழைத்து வந்த காவல்துறையினர், ஸ்வப்னா மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருமணமாகி 4 குழந்தைகள் இருக்கும் 30 வயது பெண் ஒருவர், 15 வயது சிறுவனை மூளைச்சலவை செய்து வீட்டை விட்டு கூட்டி சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மதக் கலவரத்தைத் தூண்டுவதா? - உயர்நீதிமன்ற நீதிபதியே துணை போவதா? : ஆசிரியர் கி.வீரமணி ஆவேசம்!
-
தமிழ்நாட்டை வஞ்சிக்கிற போக்கு தொடருமேயானால்... : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!
-
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
-
“அமைதியும் எளிமையுமிக்கவர்... திரைப்பாசம் குடும்ப பாசமானது..” - AVM சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!
-
சென்னை மாநகர செரீப்.. எழுத்தாளர்... தயாரிப்பாளர்... பன்முக கலைஞர் AVM சரவணன் காலமானார்!