India
தன்னை காயப்படுத்தியவரை பழிவாங்க 5 வருடமா காத்திருக்கும் நாய்.. திருச்சூரில் ஒரு சுவாரஸ்ய சம்பவம்!
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்திற்குட்பட்ட பெரும்பிலாவு என்ற பகுதியில் பேருந்து நிலையம் ஒன்று உள்ளது. இப்பகுதியில் தெருநாய் ஒன்று சுற்றித்திருந்து வந்துள்ளது. இந்த நாய்க்கு அப்பகுதி மக்கள் உணவுகளை கொடுத்து பாதுகாத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ஐந்து வருடங்களுக்கு முன்பு அந்த வழியாகச் சென்று கார் ஒன்று தெருநாய் மீது மோதியுள்ளது. இதில் நாய்க்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் காயமடைந்த நாயை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நாய் சில மாதங்களுக்கு முன்பு முழு உடல்நலம் பெற்று மீண்டும் அப்பகுதிக்கே வந்துள்ளது. இதையடுத்து அந்த வழியாகச் செல்லும் கார்களை நாய் பின்தொடர்ந்து மோப்பம் பிடித்து வருகிறது.
முதலில் நாய் ஏன் இப்படி செய்கிறது என்று அப்பகுதி மக்களுக்குப் புரியாமல் இருந்துள்ளது. பிறகுதான் லாரி, பேருந்து போன்ற வாகனங்கள் சென்றால் அவர்களை எவ்வித தொந்தரவும் நாய் செய்வதில்லை. ஆனால் கார் சென்றால் மட்டும் அவர்களை விரட்டி செல்வதை வழக்கமா கொண்டுள்ளது.
பின்னர்தான், இந்த நாய் தன்மீது மோதிய காரை தேடுகிறது என அப்பகுதி மக்களுக்குத் தெரியவந்துள்ளது. நாயின் இந்த பழிவாங்கும் போராட்டம் அப்பகுதி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”விடுபட்டவர்களுக்கும் ரூ.1,000 கிடைக்கும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!
-
தமிழ்நாடு ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக, ‘உலக புத்தொழில் மாநாடு 2025’! : எங்கு? எப்போது?
-
பஞ்சாப் மழை வெள்ளம்! : 3.87 லட்சம் பேர் பாதிப்பு - உயிரிழப்பு 51ஆக உயர்வு!
-
”பா.ஜ.கவின் பொருளாதாரச் சிந்தனை புல்லரிக்க வைக்கிறது” : வெளுத்து வாங்கிய முரசொலி!
-
தமிழ்நாட்டில் ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை : போட்டி அட்டவணையை வெளியிட்ட துணை முதலமைச்சர் உதயநிதி!